வென்றுமவற்றுளெழுவாய்தனிநின்று சென்றுபொருண்முற்றுந்திடன். |
(எ-ன்) இதுவும் அங்ஙனம் விரிந்தபாக்க ளணிபெறுதற்பொருட்டுச் சிறப்பிலக்கணத்தா லவற்றிற்கு மீட்டு மொருவகைப் பெயரு முறையுந் தொகையு முணர்-ற்று. (இ-ள்) வகையினும் விரியினுங்கூடி யிரண்டா றீராறென்னுஞ் செய்யுட்களாகிய வவை பெருமையுடைய வணியிலக்கணங்களிடத்து முத்தகம், குளகம், தொகைநிலை, தொடர்நிலையெனச் செய்யு ணான்காகப் பொருணோக்கத்தாற் றொகைபெற்று எக் காலத்திற்கும் பொருந்துத லுடையனவாம். அந்நான்கனுள் ஆதியாகிய முத்தகச்செய்யு ளொன்றாக நின்று திடனாகச்சென்று புலவன் குறிக்கப்பட்ட பொருளைப் பயந்து முற்றுப்பெறு மென்றவாறு. இவற்றுள் முத்தகம், குளகம் என்பன வடமொழிப் பெயர். ஏனையவிரண்டுந் தமிழ்மொழிப் பெயர். அவை யங்ஙனமாமாறு மே லறியப்பெறும். நிலையென்பதனை யிரண்டிடத்துங் கூட்டியுரைக்க. ஆற்றல் - பெருமை. தோற்றுதல் - உண்டாதல். சென்றென்பதனாற் செய்யுளின்கண் ணிகழ்ந்த சொற்பொருளொடு முற்றாது எஞ்சிநின்ற சொல்லேயாயினும் பொருளேயாயினும் கொணர்ந்து முற்றுவிக்க முற்றுமென்பதூஉங் கொள்க. எழுவாயென்ப தீண் டிடத்தானாகிய ஆகுபெயர். இச்சூத்திரப் பொருள்கோள் மொழிமாற்றெனக் கொள்க. இனி முத்தகச்செய்யுட் குதாரணம் வருமாறு :- பொன்னகர்புகுந்தயாணர்ப்புத்தமிர்தம் பின்னொருநிலத்துப்பிறிதொருபடிவத் தொருபகலுறைவதன்றெனவுலகுரைசெய வருள்புரிகடவுளாணையின்வேட்டமுற் றிகல்புரிவிலங்கினினந்தொலைத்ததற்பி னகநகர்புரப்பேனயர்வுயிர்த்தற்குப் பொலந்தகட்டுருளிப்புரவியூர்தியின் வலம்பயில்பாகன்வரவுறீஇப்புறநகர்த் தண்ணிழனாடினன்சார்வுழிமனனே |
|