பக்கம் எண் :

54மாறனலங்காரம்

பெண்ணியல்பெருக்கியப்பேரமிர்தெதிர்தலும்
யாவதிவ்வுருவெனவிடைவிடாதுயவலுங்
காவகத்திஃதொருகவினிலைக்களனென்
றுண்ணிகழுழுவலன்புடனின்றூட்டக்
கண்ணயந்தனவாய்க்காமுறக்காண்டொறும்
புகுமுகம்புரிதலிற்புணர்ச்சிமேற்கொளத்
தொகுபதினொன்றுந்தொடர்பிற்றோற்றி
யொளியுமூறுமுரிசையும்வாசமுங்
களியதாய்மிழற்றோசையுமைம்பொறி
யேககாலத்திலவிதழொன்றினுண்
டாகயாவருமணுகாதமைநலன்
வண்டுழாநெகிழ்ந்துமணமலிசெவ்வித்
தண்டுழாயரங்கன்றடந்துறைப்பொன்னித்
திரைவரன்றெறிநித்திலத்திரணிலவெழும்
விரைமலர்பரப்பிமெல்லணைவிரிபுன்னையி
னேந்தெழிற்சினைகவியெழினியுள்
வாய்ந்தருண்மறையார்மனக்கொள்பவரே.
(1)

என்பது இயற்கைப்புணர்ச்சி புணர்ந்தவழித் தலைமக ளிவ னெக் குலத்தான்கொல்! எவ்விடத்தான்கொல்! இன்னு மிப்புணர்ச்சிகூடுங் கொல்! இவ னென்னிடத் தன்புடையான்கொல்! எனக் கூற்றா லையுற் றுரையாளாயினுங் குறிப்பாலையநிகழும்; அவற்றைத் தலைமக னுளத்தா னுட்கொண்டு நால்வகையையமுந்தீரக் கூறியது.

(இ-ள்) பொன்னகர்......... உரைசெய-மனனே சுவர்க்கத்துட் குடிபுகுந்த அழகிய புதிய அமிர்தங் குடிபுகுந்தபின்னர்ப் பொன்மயமல்லாத மற்றொருநிலத்தின்கட் சலமயமல்லாத மற்றொரு வடிவெடுத் தொருகணப்பொழுதுந் தங்குவதன்றென் றுயர்ந்தோர் கூறாநிற்பவும்; அப்பேரமிர்து-அப் பெருமையையுடைய வமிர்தம்; அகநகர் புரப்பேன்-அகநகரின்கண் ணிருந் துலகினைப் புரக்கு மரசுரிமையுடையேன்; அருள்புரிகடவுளாணையின்...... தொலைத்ததற்பின்-என்னிடத் தினியகருணையைச்செய்யும் பால்வரைதெய்வத்தினேவலான் வேட்டைமேன் மனம்வைத் துலகத்துயிர்கட்கு மாறுபாடிழைக்கும்