பக்கம் எண் :

(சொல்லணியியலுரை)497

(இ-ள்) (முந்நீர்...  .. வியப்பான்) சமுத்திரத்தையெல்லையாக வுடையநிலத்தின்கண் ணுயர்திணையிடத் தாண் பெண் ணென்னு மிரண்டு பாலு மதிக்கும்படிக்கு (இருவிசும்பொழுக்கத்து) பெருமையையுடைய ஆகாசவீதியினிடத்து (ஒருஞான்று...... வுழப்பின்) ஒருநாளின் கண் ணொருகணப்பொழுது மொழிவில்லாத முயற்சியோடும் (ஒருதனி.... யூர்தியின்) ஒன்றென்னப்பட்ட ஒப்பற்றவுருளோடு தாளிரண்டு மில்லாதபாகனையுடைய தேரின்மீதே (ஒருபிணர்...... செம்மலின்) ஒன்றாய சற்சரைவடிவினையுடைய பெரிய கையினையும், பெருகாது சிறுகாது தம்மி லொத்த புழையொடுகூடிய விரண்டு கரடத்தினையும், மூன்று மதத்தினையும், நான்ற வாயினையு முடைய யானையை யுரிக்கு முருத்திரனைப்போலச் சிவந்து, (இருகணுமிமையாத்தேவர்கள்...... நாலாங்கடவுள் வீற்றிருக்கும் நற்றிசைவரு மிளங்கதிர்) இரண்டுநயனமு மிமையாத வானோ ரொருகாலமும் விட்டுநீங்காது திரிவிதகரணங்களு மாத்மஞானத்துடனொருநெறிப்பட விரண்டுகரங்களையுங்குவித்து மூன்று பொழுதுந் தலைவணக்கஞ்செய்ய, நான்குமுகங்களையுடைய பிரமனைப் போல விரும்பியதெல்லாங்கொடுக்கு மைந்துவிருக்கமாகிய கற்பகாடவி நீழலிலே அறமுதலாய நாலுபொருள்களுள் முன்னேநின்ற மூன்றுபாலுந் தம்மாலாய பெரியவின்பத்தைக் கைக்காள்வாயாகவென் றெதிர்கொண்டு நிற்ப, விரண்டுபக்கமு மின்போன்றதொரு மருங்குலையுடைய வானவர் மகளிர் தாளமுங் கானமும் வாச்சியமு மபிநயமு மொருகூறுபாடெய்த விரண்டுபதங்களினாலு நாடகத்தைநடித் தொழுகாநிற்ப, நாலுதிக்கிலுமுள்ள சத்துருக்கள்மாறுபாட்டைக்கெடுத்து மூன்றுமுரசமும் நீங்காமல் முன்றிலின்கண் ணாரவாரிப்ப, செவியாதிய பொறியைந்தினுந் தங்கப்பட்ட சத்தாதிக ளைந்தினையு மடக்கி யுண்மைப்பொருளைக்கூறு நாலுவேதத்தினையுந் தெளியவாராய்ந்த முக்கோற்பகவராகி யெடுத்தசென னந்தோறு மிழைத்தமுறையே யடைவுதப்பாமல்வரு நல்வினை தீவினை யென்னு மிரண்டையு மொக்கவென்று பரத்துவ சொரூபரூபகுணவிபூதி களினிலைமை யித்தன்மைத்தென நிச்சயமாகவுட்கொண்டோ ரிம்மை மறுமை யிரண்டுந் தெளிந்தோர் சாத்துவிக ராசத தாமதமென்னுங் குண மூன்றனுள் முற்குணங் குடிகொண்டோராகிய எதிகளுட னாற்பெருங் கடவுளென்னும் இந்திர னொரு பராக்கற வீற்றிருக்குங் கிழக்கென்னு நல்லதிக்கினி லுதிக்கு மிளைய நாயிறு, உலகின்கண்ணுள்ள இனியவுயிர்க