ளஞ்சுவதாக அவரவர்வாழ்நாளற்ற அந்தியத்தி லுயிரை யுண்ணும்படிக்கு விதித்த நமன்றிக்கி லெழுந்த கூறுபாடு ஆச்சரியமென்று, நினது திருமேனியிற் சுடர்ச்சோதியைக்கண் டுட்கொண் டதுவிளங்கும்படிக் குத்தர கங்கையினின்றும் ஆறுதளையு மழகியசிறையையு முடைய வண்டின் சாதிநான்குங் குடையத் தேனையொழுக்கு நறுவிதாந் தாமரைத்தாரும் முப்புரி நூலுங் கிடக்கு மார்பினையுடைய இருபிறப்பாளனாகிய மதுரகவி, யொருதானத் தெதிர்ந்து, பேரானந்தந் தழையாநின்ற மூவரா மொருதனி முதலாகிய ஸ்ரீமந்நாராயணனென ஞானத்தா லுட்கொண்டு, பொன்னாற் செய்த வீரக்கழலையுடைய நினது திருவடிகளிரண்டையுங் கட்புலனுறவும் பெருமையெய்திய மனோவாக்குக்காயங்களின்முயற்சியாற் போற்றலும், அறமுதலிய நான்குபொருளும் பயப்பதாக நல்ல கனிபோன்ற திருப்பவளத்தினைத் திறந்து, வெண்பா ஆசிரியம் கலி வஞ்சி மருட்பா வெனப் பெயர்பொருந்துதலுடைய யாப்பைந்தினுக்கு மிலக்கண மென்று சொல்வதாக, ஆறங்கத்தையுந் தெளிந்த வந்தணர்க்குரியவா யறிதற்கரிய வா நால்வேதப்பொருளினாற் பரமபதநாதனாகிய இறை கருடவாகனத் தேறி யெழுகடலுஞ்சூழ்ந்த பூலோகத்தில் வெளிவரும்படிக்குச் சுவை யாறனுள்ளு மதிமதுரமென்னு முக்கியச்சுவை மிகுவதாக, ஐந்துபொருளொடுங்கூடிய தமிழ்மொழியால், திருவிருத்தம் திருவாசிரியம் திருவந்தாதி திருவாய்மொழி யென்னு நான்குகூறுபாடுடைய நாலுபிரபந்தங்களையு முலகமூன்றுமளந்த வவன் றிருச்செவிகட்கு அமிர்தமென்று சொல்லும்படி யினிமையெய்தவூட்டிய வொப்பற்ற வரியசெயலொடு முலகின்கண்ணுள்ளவுயிர்கள் யாவும் பிறந் திறந் தலம்வரு பிறப்பாகிய பெரியபிணியைத் தீர்த்துக் கிருபைசெய்த ஞானபூரணனே ! ஆனந்தத்திற்குப் பிறப்பிடமானவனே ! நாவீறுடையானே ! அபிமானபூஷணனே ! குருகைமாநகரிடத்துதித்த பலவரங்களு முதயமானவனே ! பரசமயிகளான மதயானைத்திரளை வெல்லும் ஒருசிங்கமான திருப்பெரும்பூதூரடிகளாகிய வெதிராசனைத் திருவுளமகிழ்ந் தினிதாகவாண்ட இரண்டென்னுஞ் சரணதாமரையால் அறிவில்லாத என்னையும் ஒருபொருளாகக் கருணை புரிந் தடிமைகொண்டதற் கிந்தப் பெரியநிலத்து முற்காலத் தெனது ஏதுவாக நீ கைக்கொண்ட கைம்மா றியாதென்று சொல்லுவாயாக வென்றவாறு. |