பக்கம் எண் :

(சொல்லணியியலுரை)499

இதனுள் ஒருபகலென்றது கணப்பொழுதை ; “ஒருபகலுள்ளே யுருப்பவிர்” என்பதனா லறிக. ஒடியா வுழப்பு-ஒழிவில்லா முயற்சி. பாகன் பாகுடையென அன்விகுதி கெட்டது. பிணர் - சற்சரைவடிவு. செம்மல் - பெரியோன். இன் உவமஉருபு. நசைஇய - விரும்பப்பட்டன. முழுநலம் - பேரானந்தம். தெற்றென - தெளிய. பிறழாது - மாறாடாது. ஒருங்கு - ஒக்க. ஒரு தலை - நிச்சயம். இருமை - இம்மை மறுமை. முற்குணம் - சாத்துவிககுணம். நாலாங்கடவுள் - இந்திரன். அமைத்த - விதித்த. இறும்பூது - ஆச்சரியம். உளர்தல் - குடைதல். அவிழ்த்தல் - ஒழுக்குதல். நலம் - ஆனந்தம். நாற்பொருள் - அறம் பொருள் இன்பம் வீடு. உறுபொருளைந்துடன் என்பது “மிக்க விறைநிலையு மெய்யா முயிர்நிலையுந், தக்க நெறியுந் தடையாகித் - தொக்கியலு, மூழ்வினையும் வாழ்வினையும்” என்னும் பொருளைந்துடன் என்றவாறு. பேராண்மை - அரியசெயல். பொருட்டு - ஏது. கைம்மாறு - உபகாரங்கொண்டு உபகாரஞ்செய்கை. எவன் - யாதென்றவாறு.

முந்நீர்வரைப்பி னிருபால்வியப்பா னிருவிசும்பொழுக்கத்து ஒரு தனித்திகிரிப் பதமிரண்டுமிலாப் பாகுடையூர்தியின் முக்கட்செம்மலி னாலாங்கடவுள்வீற்றிருக்கு நற்றிசைவரு மிளங்கதிர், நமன்றிசையெழு திறனிறும்பூதென்ன, விருபிறப்பாளனோரிடத்தெதிருபு முதலெனநாடிப் போற்றலுங் கனிவாயினைத்திறந் தருமறைப்பொருளா லெழுகடற்புவனத் தெழுந்திறைவெளிவர வுறுபொருளைந்துட னுயர்தமிழ்மொழியா னால் வகைப்பனுவல் மூவுலகமுமளந்தவனிருசெவிக் கமிர்தாமெனவினி தளித்த பேராண்மையி னுயிர்கடாம் பிறந்திறந்துழலும் பிணிதவிர்த்தருள் ஞானபூரண! நாவீற! குருகாபுரிவரோதய! எதிராசனையாண்ட விருசரணாம்புயத் தென்னையு மொன்றா யருள்புரிந்தாண்டதற் கென்பொருட்டாற் கைம்மா றெவனீ கைக்கொண்டதுவே எனக் கூட்டுக.

பஞ்சாயுதங்களெனப்பாற்கடலான்பற்றியவைக்
கெஞ்சாதசாதிப்பேரிட்டெழுத--நெஞ்சே
கணக்காயர்புள்ளியிட்டகாலத்தேயோகம்
பிணக்காதவர்பேர்பெறும்.
(804)

இது மாத்திரைச்சுருக்கம்.