திலகநுதலாய்திலங்குறியென்னேவ லலகெண்பொருட்பதத்திற்காதி--நிலவெழுத்தின் புள்ளிபிரித்தாற்பொருணிலைமைத்தாமென்பார் தெள்ளியநூல்கற்றோர்தெளிந்து. | (805) |
இது மாத்திரைப்பெருக்கம். இவற்றுள் (முன்னையது) * மாத்திரைச்சுருக்கமென்பது, ஒரு பொருள் பயந்து நிற்கு மொருசொல்லாயினும் பலபொருள்பயந்து நிற்குந் தொடர்ச்சொல்லாயினு முதலெழுத் தொருமாத்திரைகுறையப் பிறிதொரு பொருள்பயப்பதாயும் பலபொருள்பயப்பதாயும் பாடுவது. அவ்வாறு அதனுள் வந்ததாவது : ஆயுதங்களுக்குச் சாதிப்பேர் ஏதிகள், அவற்றை எதிகளெனப் புள்ளியிட்டு, மாத்திரைகுறைய இருடிகள் பெயராய் எதிகளென நின்றவாறு காண்க. மாத்திரைப்பெருக்கமாவது முன்புபோலவருஞ்சொற்களுள் முதலெழுத் தொருமாத்திரையேறப் பிறிது பொருள் பயப்பது. அவ்வாறு இதனுள் வந்ததாவது :- எண்ணென்பது எள்ளும், இதனைக் கருதென்
*உம்மையான் விதந்தோதிய மாத்திரைச்சுருக்க முதலிய ஆறுக்கும் இந்நூன் மூலப்பிரதியொன்றின்மட்டும் மூலசூத்திரங்கள் காணப்படுகின்றன. அவையாவன :- “மாத்திரைசுருங்கமறுபொருளுணர்த்துரை மாத்திரைச்சுருக்கமெனவகுத்தனரே” | (49) |
“மாத்திரைபெருகமறுபொருளுணர்த்துரை மாத்திரைப்பெருக்கமெனவகுத்தனரே” | (50) |
“ஒற்றினைப்பிரிக்கமற்றொருபொருளுணர்த்து லொற்றுப்பெயர்த்தலென்றுரையுணர்த்தும்” | (51) |
“மூன்றெழுத்தொருமொழிமுதலீறிடையீ றான்றபொருள்பிறவாந்திரிபதாதி” | (52) |
“சதுரங்கவறையிற்சதிர்பெறவமைப்பது சதுரங்கபெந்தமென்றறைதருந்தன்மைய” | (53) |
“பெருவகன்றறையிற்பெந்திப்பதுவுங் கருதுகிற்கடகபெந்தமாகும்” | (54) |
என்பனவாம். |