பக்கம் எண் :

(சொல்லணியியலுரை)501

னும் ஏவற்பொருளும், கெணிதமும் என்னும் மூன்றுபொருள்பயக்கும் பதத்தின் முதலெழுத்தாய எகரத்தை யொருமாத்திரைபெருக்க ஏண் என்ன நிலையுடைமைப்பொருளைக் காட்டினவாறு காண்க.

முந்துதனித்தன்மைமொழியையொடுபுணர்ந்திட்
டந்தமுதல்புள்ளியழிந்தக்காற்--செந்தேன்
வழிந்தமகிழ்த்தார்மாறன்வண்புலவீர்சொல்லி
யொழிந்தவற்றின்பேராயுறும்.
(806)

இதுவும் மாத்திரைப்பெருக்கம்.

இதனுள், தனித்தன்மையென்பது யான், அதனை என் எனத் திரித்து, அதனை யிரண்டாவதனைப் புணர்த்து, எனையென்றாக்கிப் புள்ளியை யழிக்க ஏனையெனச் சொல்லியொழிந்தனவாயபொருளைக் காட்டினவாறு காண்க. திணை..... துறை.....

ஓராழிவையத்து தயம்புரிந்து தினம்
பேராவிருடுணிக்கும்பெற்றியா--ரீராறு
தேசுற்றநாமஞ்சிறந்தோர்பரிதியொடு
மாசற்றெழுமாதவர்.
(807)

இஃது ஒற்றுப்பெயர்த்தல்.

இதனுள், மாதவர் என்றுநின்றது மகரவொற்றைப் பெயர்க்க ஆதவர் என நின்றவாறு காண்க. முதலே நின்றமொழியின் முதலெழுத்தி லொற்றைப் பெயர்த்தலால் ஒற்றுப்பெயர்த்தலாயிற்று. இதனுள் ஓராழி வையம் - ஒப்பற்ற சமுத்திரஞ் சூழ்ந்த பூமி எனவும், ஒற்றைவண்டி பூண்ட தேர் எனவும், பேராவிருடுணித்தல் - தன்னைநினைந்த அடியாரிடத்து எடுத்தசெனனந் தோறும்விட்டுநீங்காத அகவிருளையறுத்தல் எனவும், உலகத்தைவிட்டுநீங்காத அந்தகாரத்தையோட்டுதல் எனவும், ஈராறுநாமம் - கேசவாதி துவாதசநாமம் எனவும், தாதுருமுதலிய துவாதசாதித்தியநாமமெனவும், பரிதியொடும்-சக்கரத்தோடும் எனவும் விளக்கத்தோடும் எனவும், மாசற்று ஆசற்று எனவும் சிலேடைவாய் பாட்டான் வந்தன. திணை...... துறை.......

முந்தமாயன்பதியாய்முற்றியபேர்மூன்றெழுத்தில்
வந்தமுதலீறிசையாய்மற்றிடையீ--றந்தச்