பக்கம் எண் :

502மாறனலங்காரம்

சுதரிசனத்தான்றுணைத்தாள்சூழ்சிலம்புள்ளீடாய்
வதரிவரிதரியாமாம்.
(808)

இது திரிபதாதி. இதனுள் வதரியென்பது திருப்பதி. அதனை முதலு மீறும் வரியாக்கி இடையு மீறுந் தரியாக்கி அவ்வாறாதல் கண்டு கொள்க.

எந்தையிராமற்கிமையோர்சரண்புகுத
முந்தநகரிமுதலெழுத்தில்லாநகரி
யுந்துதிரட்கிள்ளையிடையொற்றிலாக்கிள்ளைகடேர்
சிந்தமுழுதுமிழந்தான்றெசமுகனே.
(809)

இஃது அக்கரச்சுதகத்தி லோர்பேதம்.

மானவனாமேவலாமாறனித்தமாமாலை
யான்தவபோதனுமாயாய்ந்தகோ--மானவடி
நாதனின்மேனன்கலன்பூணென்முனநீவந்தெவனொன்
றாதயமாவன்புலமாய.
(810)

இது சதுரங்கபெந்தம். இதனுள் நாலுபக்கமும் மையங்களினானான்கு பதினாறறையிலும் நடுவி னாலறையிலும்மாதவன் என்னுந் திருநாமம் நின்றவாறு கண்டுகொள்க.

(இ-ள்) ஒன்றாத யமா - சருவான்மாக்களோடும் பொருந்தாத நமனே ! மானவனா - மனுகுலங்காவலனாக. மேவலாமாறன் - நங்கை யார்க்குங் காரியார்க்கும் புத்திரமோகந்தீரப் புத்திரனாம் மாறனென்னும் பிள்ளைத்திருநாமத்தையுடையவன். நித்தமாமாலை - அழிவில்லாத பெரிய பிராட்டியாருடன்கூடிய பெரியோனை. ஆன - தன்னிடத் தாக்கம்பெற்ற. தவபோதனுமா - மெய்த்தவத்தினொடுங்கூடி ஞானவானுமாகி. ஆய்ந்த கோ - அவனேபரத்துவமென்றுதெளிந்த தெரிசனராசன். மானவடி - பெருமையையுடைய திருவடிகளை நாதனின்மேல் - எனது நாவினிடத்தும் அதற்குமேலான சிரத்தினிடத்தும். நன்கலன்பூண் - நல்ல ஆபரணமாகப் பூண்ட. என்முனநீவந்தெவன் - என்முன்னேவந்து நீ சாதிப்ப தெதுதான்? ஒன்றுமில்லை. வன்புலமாய - என்னிடம் நீவருதற் கெளிய இடமன்று, வலியஇடமாகப்பட்டன ; ஆதலா லுனக்கு வரப்போகா