தென்றறிந்துகொள் என்றவாறு. மேல்-இடம்பற்றிய ஆகுபெயர். திணை - வாகை. துறை - அறிவன்வாகை. கோலநிலமேலழகுகூடுநெடுவீடுறமா மூலமெனச்சென்றுதவுமுன்னோனே--நீலமணி வண்ணாவடமலையாமாதவாகஞ்சமலர்க் கண்ணாசரணாகதி. | (811) |
இது கடகபெந்தம். நெடுவீடு - பரமபதம். திணை - பாடாண். துறை - கடவுள்வணக்கம். நாகநகராகநிதிநாகரிகராகநிறை யேகநகராகியிணையில்லா--தாகநிகழ் தென்னரங்கனாளாயசீராளராஞான நன்னரங்கர்க்கேயடியேனான். | (812) |
இதுவும் கடகபெந்தம். ஆக மாத்திரைச்சுருக்கமுதற் கடகபெந்த மீறாகச் சித்திரகவி யாறு மடைவே காண்க. திணை -...... துறை - சமயவணக்கம். (48) சித்திரகவி முற்றும். சொல்லணியியலுரை முற்றும் ------- தருகாளமேகங்கவிராயராயன்சடையனன்பாற் குருகாபுரேசர்புனையலங்காரங்குவலயத்தே கருகாதசெஞ்சொலுரைவிரித்தான்கற்பகாடவிபோல் வருகாரிரத்னகவிராயன்பேரைவரோதயனே. |
|