பக்கம் எண் :

  

நான்காவது

எச்சவியலுரை

--------

300. மொழிந்ததைமொழிதன்மாறுபடுபொருண்மொழி
பிரிபொருட்சொற்றொடர்கவர்படுபொருண்மொழி
நிரனிரைவழுவேயதிவழுச்சொல்வழுச்
சந்திவழுவொடுசெய்யுள்வழுவென
வந்தவொன்பதுமொருவழிக்கடிவழுவே.

என்பது சூத்திரம். இவ்வோத் தென்னபெயர்த்தோவெனின் எஞ்சி நின்ற வழுவணி யுணர்த்தினமையான் எச்சவியலென்னும் பெயர்த்து, ஆயினித் தலைச்சூத்திர மென்னுதலிற்றோவெனின் முன்னரோதப்பட்ட வணிபெறுஞ் செய்யுள்கட்குப் பொருந்தாத வழுக்களு ளொருவழிக் கடியப்பட்ட வழுக்களைத் தொகுத்துணர்-ற்று.

(இ-ள்) மொழிந்ததைமொழிதன்முதலாகச் செய்யுள்வழுவீறாகச் சொல்லப்பட்டுத் தொன்றுதொட்டுவந்த வொன்பதுஞ் செய்யுளகத்துவருமெனி லோரிடங்களிற் களையப்பட்ட வழுவா மென்றவாறு.

வழி - இடம். ஓரிடங்களிற் களையப்படுமெனவே சிலவிடங்களில் வழுவமைதியாகக் களையப்படாதென்பதூஉ மாயிற்று. அவையெல்லாம் மேற்காட்டுதும்.

(1)

301. அவற்றுள்,
பழியறவொருபொருண்மொழிபரியாய
மொழியொடுதொடர்வதுமொழிந்ததைமொழிதல்.

(எ-ன்) வைத்தமுறையானே மொழிந்ததைமொழிதலென்னும் வழுவாமா றுணர்-ற்று.

(இ-ள்) அங்ஙனந் தொகுத்துக்கூறப்பட்ட வொன்பதுள், மொழிந்ததை மொழிதலென்னும்வழு ஒருபொருளைக்காட்டு நிலைமொழியப்பொருளைக் காட்டும் பரியாயமொழியொடுதொடர்வதா மென்றவாறு.


* 309-ம் சூத்திரத்திலும், நிரனிரையென இடையின ரகரவைகார ஈறான பாடங்கொண்டு நிரை - கூட்டமென வுரையெழுதப்பட்டிருக்கிறது.