பக்கம் எண் :

(எச்சவியலுரை)505

உடுத்தாரகைபோன்றொளிர்மலர்ப்புன்னாகத்
தடுத்தாள்விழிகடுத்தானன்பா--நடுத்தா
னிலையென்பதாகுமிணைமேருவாகு
முலையென்பனதேமொழி.
(813)

இது மொழிந்ததைமொழிதல்.

இதனுள், உடுத்தாரகைபோன்றொளிர்மலர் என்றதனா லவ்வாறாதல் காண்க. நடு - இடை. தேம் - தேன். அஃதேற் சொற்பின்வருநிலையும் பொருட்பின்வருநிலையும் சொற்பொருட்பின்வருநிலையு மவ்வா றல்லவோவெனின் அற்றன்று, அவற்றிற்குப் பொருள் வேறென்க. என்னையெனின், சொற்பின்வருநிலையென்பது மொழிந்தசொல்லே வரினும் பொருள் வேறுபடும். அது “மானைப் பொருகயற்கண் மானைப் புவனமட, மானைக் கமல மலர்மானை - மானை” என்பதனா லறிக. பொருட் பின்வருநிலையென்பது மொழிந்தபொருளேமொழியினும் சொல் வேறு படப் பொரு ளொன்றாவதோ ரலங்காரம். அது “மாய்த்தேன் செனனம் வதைத்தேனென் வல்வினையைத், தேய்த்தேனறிவின் சிறுமையினை” என்பன. சொற்பொருட்பின்வருநிலையென்பது சொல்லும் பொருளும் பெயர்த்து வேறுவேறாகிச் சொல்லொன்றாய் வருவது. அது “மாதர்மாதர்கூர் வாளம ருண்கண்மா னிலத்து, மாதர் மாதர்கூர் வண்டிமிரளியதா மரைப்பூ, மாதர் மாதர்கூர்” என வரும்.   

(2)

302. அதுவே,
சிறப்பினும்விரைவினுஞ்சிதைவின்றாகும்

(எ-ன்) இதுவும் முன்பெய்திய திகந்துபடாமற் காக்கின்றது.

(இ-ள்) அங்ஙன மொருபொருண்மேற் பலசொல்வருதல் சிறப்பின்கண்ணும் விரைவின்கண்ணும் வருமெனி லிலக்கணவழுவின்றா மென்றவாறு. என்னை “ஒருபொருட் பன்மொழி சிறப்பினின் வழாஅ” என்பதனா லறிக.

மீமிசைத்தாய்த்தோன்றுமழல்வெண்மதிவந்தாலிறைவா
யாமிசைப்பதொன்றுளதாயெய்யேமாற்--பூமிசைவாழ்
பொன்னங்கொடிநோய்புடைபெயர்போழ்துற்றுணர்ந்த
நின்னன்பிதுவானினைந்து.
(814)