இது சிறப்பின்கண் ணொருபொருட்பன்மொழி வந்தது. கள்ளர் கள்ளர் பாம்புபாம்பு தீத்தீத்தீ போபோபோ விரைவின்கண் இரண்டும் மூன்று மொருபொருட்கு வந்தன. என்னை? “அசைநிலை பொருணிலை யிசைநிறைக் கொருசொ, லிரண்டு மூன்றுநான் கெல்லைமுறை யடுக்கும்” என்பதனா லறிக. பொருணிலை, விரைவு வெகுளி யுவகை யச்ச மவல மென்னு மைந்துபொருண்மைக்கண்ணும் வருமெனினும் இவை விரைவு. (3) 303. | பகர்ந்தமுன்மொழிப்பொருளொடுமுரண்பான்மையிற் புகன்றிடுமதுவேமாறுபடுபொருண்மொழி. |
(எ-ன்) மாறுபடுபொருண்மொழியாமாறுணர் - ற்று. (இ-ள்) முன்னர்மொழிந்தமொழிப்பொருளொடு மதன்பின்னர் வருமொழிப்பொருள்மாறுபடுபகுதியையுடைத்தாகக் கூறுமது மாறுபடு பொருண்மொழியா மென்றவாறு. பின்னர்வரு மொழிப்பொருளென்பது எதிர்மறையெச்சம். முற்றவுரைத்தமுதுவேதநுட்பமெல்லாங் கற்றுணர்ந்துமெய்ஞ்ஞானங்கைக்கொண்டீர்--தெற்றெனவே தத்துவங்கண்மூன்றினையுஞ்சந்தயந்தீரீரினிமே னித்தமநித்தந்தெளியீர்நீர். | (815) |
இது மாறுபடுபொருண்மொழி. என்னை? இதனுள், ‘முதுவேத நுட்பமெல்லாங் கற்றுணர்ந்து மெய்ஞ்ஞானங் கைக்கொண்டீர்’ என்று கூறி, ‘தெற்றெனவே தத்துவங்கண்மூன்றினையுஞ் சந்தயந்தீரீர்’ என்றதனான் மாறுபடுபொருண்மொழியாயிற்று. தெற்றென - தெளிய. தத்துவங்கண் மூன்றென்பன - சித் தசித் தீச்சுரம். (4) 304. | அச்சமுங்காமமுமகமிகினுரித்தே. |
(எ-ன்) இதுவு மெய்தியதிகந்துபடாமற் காக்கின்றது. (இ-ள்) அச்ச மகத்து மிகினுங் காம மகத்து மிகினு மவ்வா றுரைக்கப்படு மென்றவாறு. அகம் - உள்ளம். காமம் - விருப்பம். வாசமலர்மெல்லணைமேல்வைத்தாலுமண்டழல்போற் கூசுமலர்ச்சிற்றடிக்குக்கொற்றவா--நேசமது | (439) |
|