பக்கம் எண் :

508மாறனலங்காரம்

பெற்றபதிவானோர்பெருமான்புரந்தபதி
புற்றரவின்பிள்ளைபுதன்.
(816)

இது கள்ளுண்டுமயங்கினான்மொழிந்தது. பித்தர் கூறுவனவும் வந்தவழிக் கண்டுகொள்க. வரையிலவென்னாது கடிவரையிலவென்றதனால், பிள்ளைமையான்மொழியுங்காலு மாம். அஃதே லிக்குற்றங்களெல்லாஞ் செய்யுணோக்கிவருவனவாதலாற் செய்யுட் கிலக்கணங்கூறு நூலினுளன்றே யுணர்த்துவது ; ஈண்டுரைத்தல் பிறிதெடுத்துரைத்த லென்னுங் குற்றமாமெனின், நன்றுசொன்னாய் ! அச்செய்யுளென்பன சட்டகம் அலங்காரமென இரண்டாம் ; அவற்றுள் அலங்காரமென்பன அச்சட்டகத்தைப் பொலிவுசெய்வனவாமாதலாற் செய்யுட்குப் பொலிவழிவு செய்வன வீண்டு முற்கூறி யதன்பின்ன ரொழிபிற் செய்யுட்குப் பொலிவு செய்வன செய்யுட்குவாராமற் புணர்க்கவென வீண்டுரைக்கப்பட்டதாதலாற் பிறிதெடுத்துரைத்தலென்னுங் குற்றமாகாதென் றறிக.  

(7)

307. உவர்ப்பறத்துணிந்தொருபொருள்குறித்துரைத்தசொற்
கவர்த்திருபொருட்குறல்கவர்படுபொருண்மொழி.

(எ-ன்) வைத்தமுறையானே கவர்படுபொருண்மொழியாமா றுணர்-ற்று.

(இ-ள்) ஒருபொருளைக் குற்றமறத்தெளிந் துட்கொண்டுரைத்த சொற்குப் பொருள் கவர்த்துப் பிறிதுமொருபொருளைக்காட்டுவதாகி யிரண்டுபொருளைக் காட்டுதல் கவர்படுபொருண்மொழியென்னும் வழுவா மென்றவாறு.

பற்றற்றிடுதிடத்தாற்பற்றியதேபற்றியயன்
மற்றொன்றுதன்னைமதியாதாங்--கொற்றமிகும்
வேல்விட்டெறிந்தனையவெய்யவிழிநோக்கத்தாய்
மால்விட்டுநீங்கார்மனம்
(819)

இது கவர்படுபொருண்மொழி.

இதனுள், மால்விட்டுநீங்கார்மனம் என்பது ஸ்ரீமந் நாராயணன் விட்டுநீங்காதார் மனமெனவும் பித்துவீட்டுநீங்காதார் மனமெனவும் முதலே தெளிந்து கொண்டுரைத்த பொருளைக்காட்டுவதுடனிருபொருட்குக் கவர்த்தவாறு காண்க. பத்தர்மேற்சொல்லுங்காற் பற்றற்றிடுதிடத்தா லென்பது அய னரன் மண் பெண் பொன் னென்னு மாசைகளைவிட்டு