பக்கம் எண் :

(எச்சவியலுரை)509

நீங்கிய வுண்மைஞானத்தால் என்பதாம். பற்றியதேபற்றி என்பது அந்தரியாமியாகநின்ற அவனது சொரூபரூபகுணவிபூதியையுட் கொண்டு அதுவே தியானமாக என்பதாம். அயல் மற்றொன்றுதன்னை மதியாதாம் என்பது அவைநாலுமேயன்றி வேறொன்றினையு முட்கொள்ளாதா மென்றவாறு. பித்தர்மேற்சொல்லுங்கால், பற்றியதேபற்றி யயன் மற்றொன்றுதன்னை மதியாதாம் என்பது சான்றோர் தெருட்டத் தெருளுறாது தான்பற்றியதே பற்றிக்கொண்டு உண்மையாக வொன்றினையும் பற்றாததாம் என நின்று கவர்த்தது காண்க.  

(8)

308. வசைபொருந்தாவழிவரினதுமரபே.

(எ-ன்) மேற்சொன்ன கவர்படுபொருண்மொழி வழுவல்லவா மிட முணர்-ற்று.

(இ-ள்) அக் கவர்படுபொருண்மொழி குற்றம்பொருந்தாவிடத்துப் பொதுப்படவுரைப்பின் வழுவன்று, இலக்கணமா மென்றவாறு.

பரப்பமர்கண்ணாட்கிடும்பைபாலிக்குமென்றே
னிரப்பிடும்பையார்க்கெதிர்சென்றீயா--நிரப்பே
பெருநிரப்பென்கின்றாய்பெருமானேயெண்ணி
யிருநிதிக்குப்போவேனெனல்.
(820)

இதனுள் எனல் என்னும் அல்லீற்றுவியங்கோள், விதியும் விலக்குமாக நின்றும் வழுவன்றாயிற்று. என்னை? யா னவ்வண்ணங்கூறவு நீ யதனையுட்கொள்ளாயாகிக் கூறாநின்றாய் ; நினது திருவுள்ள மதுவேயானா லிரண்டையு மனத்தாலெண்ணித் துணிந்தென்னுடனே பொருண் மேற்செல்வேனென்று கூறாதொழிவாயாக வெனவும், அதுவல்லது செல்லத் துணிந்தாயெனில் எம்பெருமானே ! இறைவியோடும் நின்செலவை நீயேசென் றியான் பொருண்மேற்செல்வேனென்று கூறுவாயாகவெனவும் இரண்டாய கவர்படுபொருண்மொழி விதியினும் விலக்கினுங் குற்றமல்லவாயிற்று. பகுதி - பொருள்வயிற்பிரிதல். துறை - நின்செலவை நீயேகூறென்றல்.

(9)

309. முன்னரெண்ணிற்குமொழிமாற்றிக்கொளப்
பின்னரெண்ணிரல்பிறழ்வதுநிரனிரைவழு.

(எ-ன்) வைத்தமுறையே நிரனிரைவழுவாமாறுணர் - ற்று.