பக்கம் எண் :

510மாறனலங்காரம்

(இ-ள்) செய்யுளகத்து முன்னரெண்ணப்பட்ட பெயர்வினைகளான முறைக்கு மொழிமாற்றிக்கொள்ளும்படிக் கதன்பின்னரெண்ணப் பட்டுவரும் பெயர்வினைகள் முறைபிறழவைக்கப்படுமது நிரனிரைவழுவா மென்றவாறு. பெயர்வினையென்பது சொல்லெச்சம். நிரல் - முறை. நிரை - கூட்டம். பிறழ்தல் - தானமாறாடுதல்.

கலவமயில்சாபங்கழுநீர்குமுத
மிலவநுதல்சாயலிதழ்வா--யுலவுவிழி
நண்பாபொனங்கொடிதானண்ணுமிடநாவீறன்
பண்பார்துடரியிலோர்பால்.
(821)

என வரும். இதனுள், மயில் சாபங் கழுநீர் குமுதமென முதலே யெண்ணப்பட்ட பெயர்முறைக்குப் பின்னர் இயல் நுதல் நோக்கம் வாய் என்னாது, நுதல் சாயல் வாய் நோக்க மென முறைபிறழவைத்தமையால்நிரனிரைவழுவாயிற்று.   

(10)

310. உய்த்துணரிடமெனிலுரிமையுடைத்தே.

(எ-ன்) அம்முறைபிறழ்ச்சி யாமாறுணர் - ற்று.

(இ-ள்) அங்ஙனஞ் சொல்லப்பட்ட முறைபிறழ்ச்சி உய்த்துக் கொண்டுணரப்படுந்தானமாகில் வழுவன்றென்றுகொள்ளு மிலக்கண முறைமையுடைத் தென்றவாறு.

அங்ஙனஞ்சொல்லப்பட்ட முறைபிறழ்ச்சியென்பது அதிகார நோக்கத்தா லெச்சமாக விரிந்தது.

மந்தன்கதிர்மழைக்கோள்வானோர்குருமேதை
யிந்துநிலமகன்பாம்பென்பவற்றுட்--பைந்தொடியாய்
தேறுமிடைநான்குந்தெரிசுபக்கோளேனையவாய்க்
கூறியவைபாவக்கோள்.
(822)

என வரும். இதனுள், உய்த்துணர்ந்துகொள்ளப் பிழையாமல் வைத்தவிடமாவன :  மந்தன்முதலாகப் பாம்பீறாக வடைவேயெண்ணி, மழைக்கோள் வானோர்குரு மேதை யிந்து வென்னு மிடைப்பட்ட நான்குஞ் சுபக்கோளென்றும், மந்தன் கதிர் நிலமகன் பாம்பு என முதலினு மீற்றினுநின்ற நான்கும் பாவக்கோளென்று முய்த்துணரவைத்தவாறு கண்டுகொள்க. பாம்பு - சாதியேகவசனம்.  

(11)