311. | நசைதீர்யதிவழுநாடுகிலோசை யிசைதரநிகழாதிழுக்குவதாகும். |
(எ-ன்) முறையே யதிவழுவாமா றுணர்-ற்று. (இ-ள்) விரும்பப்படாத யதிவழுவென்பதனை யாராயுங்காலத்துச் செய்யுட்கமைத்த புணர்ச்சியிசைபொருந்துவதாய்நடவாது மரபு வழுவுவதா மென்றவாறு. பார்க்கும்பொழுதுநிலம்பார்த்துப்பார்வையையா நீக்கும்பொழுதுநிலம்பாரா--நோக்கு வடைவடைவேவந்தவவற்றுண்முதனோக்கந் தடையறயாம்வாழ்வதற்கோர்சார்பு. | (823) |
இதனுள், நோக்கடைவடைவேவந்தவென்புழி நோக்குவடைவடைவே வந்த வெனச் சொற்கூடா தறுத்திசைத்து வழுவாயிற்று. (12) 312. | அதுவே, வழுவின்றாமெனல்வகையுளிக்காகும். |
(எ-ன்) மேலெய்திய திகந்து படாமற் காக்கின்றது. (இ-ள்) அங்ஙனம் வரப்பட்ட யதிவழு வழுவில்லையென்று சொல்லப்படுவது வகையுளியாகச்சேர்த்துக்கொள்ளுமிடத்துக் குற்றமில்லையா மென்றவாறு. வாளிவேல்சேலாமதர்நோக்கமேருமுலை வேளினடல்விற்போன்மிளிருநுத--லாளிநிகர் காவலவனாற்றலதுகாய்ந்தகனிவாய்பவளம் யாவருணர்வுட்காதிவட்கு. | (824) |
இதனுள் வகையுளிசேர்த்தேகொள்ளக் குற்றமின்றாயிற்று. துறை குறிவழிச்சென்றபாங்கன் றலைவனைவியத்தல். (13) 313. | திணைமுதலாகச்செப்பியவழுவினொன் றணைதருமாயினுமதுசொல்வழுவே. |
(எ-ன்) முறையே சொல்வழுவாமா றுணர்-ற்று. (இ-ள்) திணைமுதலாகச் சொல்லப்பட்ட சொல்வழுவேழினுள், பலவேயன்றி யொருவழுச் செய்யுளகத்துப்பொருந்துமாயினு மது சொல் வழுவா மென்றவாறு. |