எண்ணிறந்தநால்வகைத்தோற்றத்துளாய வெழுவகைத்தாஞ்செனனமுநீயிசைந்துபின்ன ரெண்ணிறந்தவிடங்கடொறுநிற்பதோடு மியங்குதியீங்கிவையன்றியேககாலத் தெண்ணிறந்ததொழில்புரிதியண்டரண்டத் திவ்வுலகிற்பாதாளத்தின்பதுன்ப மெண்ணிறந்தவிவர்க்கிவற்றிற்கிசைந்ததென்றென் றிசைந்ததிறம்வாய்மையதாயிசைப்பதோடும், | (57) |
இவ்வுடலத்திறத்தியிறந்திடுகாயத்தை யீமத்தங்கிடுபொழுதிலெரிந்திடாதே யவ்வுடலத்துடனெழுந்துவருதிகாயத் தருவருப்பாக்கியமலமூத்திரங்களெய்தாச் செவ்வியின்வாழ்ந்திடுதிநரைதிரைமூப்பில்லாச் சிறப்பினொடும்வளிமுதலாச்செறிந்தமூன்றும் வவ்வுதலற்றீறில்சுகானந்தமேய வச்சிரகாயம்புணர்ந்தவாழ்வினோடும், | (58) |
மின்னுயிர்க்குங்கனகன்வினவினபொற்றூணம் வெடிப்பவுதித்தடித்தகரம்பிடித்தபோல வுன்னுயிர்கொண்டெனதுகரம்பிடித்ததூணத் துறுதியிவைமுதலவுனக்குறுதிவதின்றான் மன்னுயிர்தாமலகிலவாம்வகையுமீசன் வாழ்வகையுமுணர்ந்திலையுன்மத்தனானா யின்னுயிர்வேறின்னுயிர்கட்குயிராய்நின்ற விறைவனும்வேறெனத்தெளிவித்திதஞ்செய்வாரே. | (59) |
இவையாறும் வினைப்பெயர்கொண்டுமுற்றின அந்தியகுளகம். திணை - பாடாண். துறை - முனிவர்வாழ்த்து. *”ஆங்கதன்” முதல், “கொண்டமால்வரை” ஈறாக 9-ம் பரனிருப்பான் என வினைமுற்றுக் கொண்டுமுற்றின அந்தியகுளகம். இவற்றின்மிக்குவருவனவு முள ; அவையும் பெருங்காப்பியங்களினிடத்துக் கண்டுகொள்க. குளகம் முற்றும்.
* ‘ஆங்கதன்’ என்பது குருகாமான்மியம் பரமபதவருணனைச் சருக்கத்து 105-ம் செய்யுள். ‘கொண்டமால்வரை’ என்பது மேற்படி சருக்கத்து 113-ம் செய்யுள். |