| 69. | உலவாதகேள்வியொருவர்பலராற் பலவாய்ப்பகர்பாவினமா--யிலகுபொரு ளெண்பாட்டளவுதொழிலிடங்காலஞ்சினையின் பண்பாந்தொகைநிலைச்சொற்பா. |
(எ-ன்) வைத்த முறையானே தொகைநிலைச்செய்யுளாமாறுணர்-ற்று. (இ-ள்) தொகைநிலைச்செய்யுளென்பது குறையாத கேள்வியினை யுடைய வொருவரானாதல் பலரானாத லுரைக்கப்பட்டுப் பலபாட்டாய் வருவனவாய், அவை பொருளானும் எண்ணானும் பாட்டானும் அளவானும் தொழிலானும் இடத்தானும் காலத்தானும் சினையானும் தொகுத்து பெயர்பெற்ற பண்பினையுடையவாமென்றவாறு. இன் உருபுமயக்கம். உம்மை செய்யுள்விகாரத்தாற் றொக்கது. உலவாத கேள்வியென்பதனை யிருவரிடத்துங் கூட்டுக. கேள்வி-கல்வி ஒருவராலுரைக்கப்பட்டன திருவள்ளுவப்பயன். பலராலுரைக்கப்பட்டன - நெடுந்தொகை. இஃ தெல்லாத் தொகைக்கும் பொது. பொருளாற்றொகுத்த பெயர்பெற்றது புறநானூறு. எண்ணாற்றொகுத்தபெயர் பெற்றது பதிற்றுப்பத்து. பாட்டாற்றொகுத்தபெயர்பெற்றது கலித்தொகை. அளவாற்றொகுத்தபெயர் பெற்றது குறுந்தொகை. தொழிலாற்றொகுத்த பெயர்பெற்றது ஐந்திணை. இடத்தாற்றொகுத்தபெயர்பெற்றது களவழிநாற்பது. காலத்தாற்றொகுத்தபெயர் பெற்றது கார்நாற்பது. சினையாற்றொகுத்தபெயர்பெற்றது நயனப்பத்துபயோதரப்பத்து. உம்மை யெச்சவும்மையாகலானிவ் வெட்டுவகையானுமன்றிப் பிறவகையானும் பெயர்பெற்றனவுளவேனும் அவையும் அறிந்துகொள்க. தொகைநிலைச்செய்யுண் முற்றும். (5) | 70. | சொல்லாற்பொருளாற்றொடருந்தொடர்நிலைக ளெல்லாமவற்றுளெழுத்தசைசீர்--மல்கு மடிசொற்றொடர்நிலைகளந்தமுதலாம் படிவைத்தனர்முன்பகுத்து. |
(எ-ன்) தொடர்நிலைச்செய்யுளினது கூறுபாடுணர்-ற்று. |