(இ-ள்) தொடர்நிலைச்செய்யுளென்றுகூறப்படுவன வெல்லாஞ் சொல்லானும் பொருளானுந் தொடரப்படுவனவாம். அவ்விரண்டனுள், சொற்றொடர்நிலையைப் பகுத்துக்கூறுமிடத்து நின்றசெய்யுளி னீற்றெழுத்தாதல், அசையாதல், சீராதல், அடியாதல் வருஞ்செய்யுட்கு முதலாகத் தொடுக்கும்படியென வுட்கொண்டனர் முற்காலத்துப் புலவரென்றவாறு. வைத்தனர் - உட்கொண்டனர். இச்சூத்திரப்பொருள்கோள் மட்டுறுப்பு. எல்லாமென்றதனான் மூன்றாவது சொல்லினாலும் பொருளினாலுந் தொடர்வதுமுளவெனக்கொள்க. மல்குமென்று சிறப்பித்தவதனால் நான்கும், பலவடியான்வரு மொருசெய்யுளகத்தும் வருவதுளவெனக் கொள்க. இவற்றிற்கெல்லாஞ் செய்யுள் வருமாறு :- நாவலன்பின்போந்தநறுநீர்த்திருவரங்கங் காவலன்பொற்றாளாங்கமலத்தே--பாவலர்தம் பாமாலைசூட்டாதப்பாமாலையையெவனோ தாமானிடர்க்களிக்குஞ்சால்பு. | (60) |
புரந்தரனாதியராயபுத்தேளிர்பொற்போதுகடூஉய் நிரந்தரமேத்தும்படியேதுயின்றதுநெஞ்சத்தன்பு கரந்தரன்சாபந்துடைத்தோனிருந்ததுதொண்டர்க்கெல்லாம் வடிந்தரநின்றதரங்கநன்காஞ்சிவடமலையே. | (61) |
மலைமுழைவைகலும்வைகினராகியுங் கனிகிழங்கடகுகண்டனமாந்தியு மூவராயுமுதற்கடவுட் காவலநீயேகாத்தல்வேண்டுவலே. | (62) |
வேண்டுவதிங்கின்றெமக்குமெய்க்காவிரியரங்கத் தாண்டகைதன்வெற்பிலணங்கன்னார்--காண்டகுசீர்ப் பொன்றாமலர்முகமும்பூண்முலையுங்கண்டனம்யா மென்றாலினியிதன்மேல்யாது. | (63) |
| என்றாலினியிதன்மேல்யாதுவேண்டுமெனக்குவெள்ளிக் |
|