யன்றாடரவிற்றுயிலரங்கேசனருள்புரிந்து பொன்றாதசெல்வத்திருமாதுடனுட்புகுந்தனனே. | (64) |
இவ்வைந்துபாட்டினும் எழுத்து அசை சீர் அடியென்னும் நாலந்தாதியும் அடைவே வந்தவாறு கண்டுகொள்க. இவற்றுள் “வேண்டுவதிங்” கென்ற வெண்பாவொன்றும் கிளவிவேட்டல். ஒழிந்த நான்குங் கடவுள்வாழ்த்து. இவை நம்பெருமாள்மும்மணிக்கோவை. இனிப் பலவடியான்வரும் ஒரு செய்யுளகத்து நாலந்தாதியும் வருமாறு :- நாவேயுரனுறுநலமிகுமுதற்பொருள் பொருளுரையாய்தரிற்புகலுமற்றுளதே யுளதேவண்டிமிருறுமலரோடை யோடைமால்வரைமூலமென்றுரைசெய வோடைமால்வரைமூலமென்றுரைசெய வுரைவிசைத்தடங்காவொல்லையிற்குறுகுபு புனிற்றாவெனவருள்புரிந்திடர்செகுத்த வறைபுனலரங்கத்தமுதினையன்றியு மதித்தொருமுதலையேமகிழ்ந்து துதிப்பதுமுளதோசுரர்பெருநாவே. | (65) |
இந்நேரிசையாசிரியப்பாவினுள் நாலந்தாதியும் வந்தவாறு காண்க. இன்னு மவ்விலேசானே இறுதிநின்ற சொற்பொருணோக்கத்தான் ஆகுபெயராற் சொற்றொடர் வருவனவுமுள. அதற்குச் செய்யுள் :- “பரிவதிலீசனைப்பாடி விரிவதின்மேவலுறுவீர் பிரிவகையின்றிநன்னீர்தூஉய்ப் புரிவதுவும்புகைபூவே.” | (66) |
“மதுவார்தண்ணந்துழாயான் முதுவேதமுதல்வனுக் கெதுவேதென்பணியென்னா ததுவேயாட்செயுமீடே.” | (67) |
|