இவை முதற்பத்தி லாறாந்திருவாய்மொழியின் முதற்பாட்டும் இரண்டாம்பாட்டும். இவற்றுள், பூவென்றசொல்லின் பொருணோக்கத்தாற் சினையைக்கூற முதலையறிவிக்கும் ஆகுபெயரால் அந்தாதித்தவராறுணர்க. இவை நாலுவேதத்தையும் ஓதாதுணர்ந்த ஞானபூரண ஞானமுத்திரைக்கராம்புயன் றிருவாக்கு. சொற்றொடர்நிலைச்செய்யுண் முற்றும். (6) | 71. | பெருங்காப்பியங்காப்பியமெனும்பெற்றித்தாற் சுருங்காப்பொருட்டொடருஞ்சொல்லிற்--பொருந்தவற்று ளொன்றும்பலவும்பொருளிற்குறைவுறுமே லென்றுமதுகாப்பியம். |
(எ-ன்) பொருட்டொடர்நிலைச்செய்யுளின்கூறுபாடுணர்-ற்று. (இ-ள்) பொருட்டொடர்நிலைச்செய்யுளின்கூறுபாடு சொல்லுமிடத்துப் பெருங்காப்பியமென்றும் காப்பியமென்றுங் கூறு மிரண்டியல் பினையுடைத்தாம் ; அங்ஙனம் பொருந்தியவற்றுள் அறமுதலிய பொருள்கள் நான்கினுள் ஒன்றாயினு மிரண்டாயினுங் குறைவெய்தவரு மெனில் அதனை யெக்காலத்தினுங் காப்பியமென்பதேயா மென்றவாறு. எனவே நாற்பொருளுங் குறைவின்றிவருவதே பெருங்காப்பிய மென்பதாம். சுருங்காப்பொருட்டொடரெனவே பொருட்டொடர் மிகவும் விரிவுடையதென்பதூஉமாயிற்று. (7) | 72. | வைத்தபெருங்காப்பியநிலையும்வாழ்த்தியல்பார் மெய்த்தவவையடக்கம்வீறுசான்--முத்திதருந் தெய்வவணக்கமுடன்செய்பொருளுமுன்வரவாங் கெய்தவுரைப்பதுதானேய்ந்து. (8) | | | | 73. | தப்பிலாநாற்பொருளுஞ்சாற்றுவதாய்த்தாரணிமே லொப்பிலாதான்சரிதையுட்கொண்ட--செப்பமுற நன்மணமில்வாழ்க்கைநலம்புதல்வர்ப்பேறுபசும் பொன்மகுடம்வைத்தின்புறல். (9) |
|