பக்கம் எண் :

பொதுவியலுரை77

74. அலையாழிமேன்மையருட்புயலின்செய்கை
மலையாறுநாடூரின்வண்மை--தொலையா
விருசுடரின்றோற்றமிருதுவளம்பானம்
பொருபுனல்புக்காடல்பொழில்.

(10)

 
75. மந்திரந்தூதொற்றொடல்வாய்ந்தநிரைகோடல்
புந்தியுறச்சேறல்புறத்திறுத்தல்--வெந்திறல்கூர்
மிக்கவிகல்வென்றிநிலையாமையைமிகுத்தல்
கைக்கிளைகள்கூறுங்கடன்.

(11)

 
76. படலமிலம்பம்பரிச்சேதங்காண்டந்
தொடர்தொடர்பிற்பாடையுரைதோய்ந்துந்--திடமுறச்சொன்
மூன்றுட்கொளலாமுறையிற்சுவைவிறல்கூர்ந்
தான்றவர்மெய்ப்பான்புகல்வதாம்.

இவ்வைந்து பாட்டும் என்னுதலிற்றோவெனின், மேற்சொன்ன பொருட்டொடர்நிலையிரண்டனுள்ளுங் காப்பியத்தின் மரபுணர்த்திப் பெருங்காப்பியத்தின்மரபுணர்-ற்று.

(இ-ள்) சொல்லுவானுட்கொண்ட பெருங்காப்பியத்தினிலக்கண முலகமதிக்கப்பட்ட வாழ்த்தியலும் அவையடக்கியலும் தெய்வவணக்கமும் செயப்படுபொருளும் என்னும் நான்கும் பாயிரத்தினு ளவ்வவ் விலக்கண முரைத்தபடியே பொருந்துவனவாய், வழுவுதலில்லாத நான்கு பொருளையுங் குறைவறக் கூறப்பெற்று, உலகத் தொத்தாரு மிக்காரு மில்லாத தலைவன்சரிதையுட்கொண்ட வுண்மையுற்று, நன்மணம், இல்வாழ்க்கை, கலவி, புதல்வர்ப்பேறு, பொன்முடிபொறுத்தின்பமுறுதல், கடலை மேகத்தை மலையை யாற்றை நாட்டை நகரத்தை ஆதித்த வுதயத்தைச் சந்திரவுதயத்தைச் சிறுபொழுதைப் பெரும்பொழுதை வருணனைபுரிதல், வீரபானம், காமபானம், புனல்புக்காடல், பொழில்புக் காடல், மந்திரம்பகர்தல், தூதுவிடுதல், ஒற்றாடல், நிரைகோடல், மேற்சேறல், எயிற்புறத்திறுத்தல், செருச்செய்கை, வென்றியெய்தல், வென்றவேந்தன் நிலைபெற்றிருப்ப இறந்தவேந்த னிலையாமையை மிகுத்துரைத்தல், ஆண்பாற்கூற்றுக்கைக்கிளை, பெண்பாற்கூற்றுக் கைக்கிளை யென்னு மிவற்றினையும் பாடாண்பகுதி யென்பதனோடுங் கூறுமுறைமை