பக்கம் எண் :

78மாறனலங்காரம்

யுடன் படலமென்றாதல் இலம்பகமென்றாதல் பரிச்சேதமென்றாதல் பகுதிப்படுமவற்றை யுட்கொண்ட காண்டங்களோடும் பொருட்டொடர் புடைத்தா மொருதிறப்பாட்டு மிருதிறப்பாட்டுமாகிய பாப்பாவினத்தோடும் பாடைவிராயு முரைவிராயு மேற்சொன்ன வுண்மையுடைய முத்தகமுதலிய மூன்று முட்கொள்வனவா முறைமையுடன் எட்டு மெய்ப்பாடும் மெய்ப்பாட்டுக்குறிப்பு மிகுந்து கல்வி கவியான்மிக்கோர் மதிக்கும்படியுரைப்பதா மென்றவாறு.

இதனுள், வைத்த என்பது உட்கொண்ட எ-று. நிலை--இலக்கணம். இயலு மது. பார்-உயர்ந்தோர் ; இடைநிலைத்தீபகம். முன்வரவு-பாயிரம். என்னை? நூற்குமுன்னேவருதலான் முன்வரவென்றாயிற்று. செய்பொருளு மென்னு மும்மையாற் றழுவப்படும் எஞ்சுபொருட்கிளவி பிற்படக்கிளத்தலாய்நின் றும்மையில்செஞ்சொல்லாய் முற்படக்கிளந்த வாழ்த்தியல் முதலாய மூன்றினுங் கூட்டி விரித்துரைக்கப்பட்டது. என்னை? “எஞ்சுபொருட்கிளவிசெஞ்சொலாயிற், பிற்படக்கிளவார் முற்படக்கிளத்தல்” என்றாராகலின். நலம் - புணர்ச்சி. இருதுவும் பானமும் சாதியேகவசனம். புக்காடலென்பதனைப் புனல் பொழி லிரண்டினுங் கூட்டுக. செப்பமுற - உண்மையுற ; என்பது, செய்து என்பது செய என ஒரு வினையெச்சம் மற்றொருவினையெச்சமாகிநின்றது. வாய்ந்தநிரைகோடல் என்பது முதலாக் ‘கைக்கிளைகள் கூறுங்கடன்’ என்பதனால் வெட்சிமுதற் பாடாண்டிணையீறாகப் புறம் புறப்புறம் அகப்புறம் என்னும் மூன்றுகூறாய வெழுதிணையு முறையே கூறியவாறுங் காண்க. இவ்வாறன்றி, இவற்றி னிடையிடை கரந்தை நொச்சி என்பவற்றையும், இறுதியிற் பொதுவியல் கைக்கிளை பெருந்திணை என்பவற்றையும் கூட்டிப் பன்னிரு படலமாக்கி யவற்றிற்கு இருபது, பதினாலு, இருபத்தொன்று, இருபத்திரண்டு, ஒன்பது, இருபத்தொன்பது, இருபத்துநாலு, முப்பத்துமூன்று நாற்பத்தெட்டு, முப்பத்தேழு, பத்தொன்பது, முப்பத்தாறு எனத் திணையுந் துறையுமாக விரித்து வெண்பாமாலையாகிய வழிநூலுள் ஐயனாரிதர் கூறிய தூஉம் இவ்வெழுதிணையு ளடங்குமெனக் கொள்க. தப்பிலா நாற்பொருளுஞ் சாற்றுவதாய் என்பதனாற் கூறிய வுறுப்புக்கள் சிலபல குறையினும் நாற்பொருளுங் குறையாதனவெல்லாம் பெருங்காப்பியமெனக் கொள்க. பாடை - திசைச்சொல் ; “சிதைந்தனவரினு மியைந்தனவரையார்” என்