பதனால் *பாஷை பாடையாயிற்று. உரை - செய்யுளின்றி உரைநடை யான் வருவது. அது இளங்கோவடிகள் கூறிய சிலப்பதிகாரத்துட் கண்டுகொள்க. உம்மையால் உரையிடைவிரவாது வருவதே சிறப்புடைத்தெனக் கொள்க. (12) | 77. | மன்னியபேர்யாப்பிற்குவைதருப்பம்வான்கவுடம் பன்னியபாஞ்சாலமெனப்பகுத்து--மின்னிடையாய் நன்னூன்முழுதுணர்ந்தோர்நாட்டகத்துநாட்டலுறீஇ முன்னூலுட்கண்டநெறிமூன்று. |
(எ-ன்) இதுவு மேற்சொன்ன செய்யுட் கூறுபடுபாகமுணர்-ற்று. (இ-ள்) இங்ஙனம் நால்வகைத்தாக நிலைபெற்றபெயரையுடைய செய்யுளனைத்திற்கும் வைதருப்பம் கௌடம் பாஞ்சாலமென்னு மூன்று நாட்டினகத்துள்ளாரால் வழங்கும் பாகத்தான் மூன்றாகப் பகுத்து அவ்வவநாட்டினதுபெயரால் நல்ல நூல்களை முற்றவுணர்ந்தோர் தங்களாற் செய்யப்படுமுந்து நூலகத்து நாட்டுதலையுற்றுக் கண்டமார்க்க மூன்றுளவாமென்றவாறு. உறீஇ - உற்று. வைதருப்பம் - விதர்ப்பநாட்டது. மின்னிடையாய் என்பது மகடூஉமுன்னிலை. (13) | 78. | இழுமென்மொழியுமினியபொருளுந் தழுவுமதுவைதருப்பம்--விழுமியவாஞ் சொற்கடினத்தோடும்பொருட்கடினந்தோய்ந்தரிதாய்க் கற்பனசாருங்கவுடங்காண். |
(எ-ன்) வைத்தமுறையானே வைதருப்பபாகமுங் கௌடபாகமும் பாகுபடுமாறுணர்-ற்று. (இ-ள்) மெல்லென்ற விழுமிய இனியமொழியும், மெல்லென்ற விழுமிய இனிய அறமுதலிய நாற்பொருளும் பொருந்துவன வைதருப்ப பாகமாமென்றும், விழுமிய சொற்கடினமும் பொருட்கடினமுந்தோய்ந் தரியநடைத்தாய்ப் புலவனாற்கூறப்படுவது கௌடபாகமாமென்றும் மனத்தாற் கண்டுகொள்க வென்றவாறு.
* பாழ்சை - பிரதிபேதம். |