பக்கம் எண் :

80மாறனலங்காரம்

விழுமியது - முக்கியம். இதனுள் விழுமியவாம் என்பதனை இடைநிலைத்தீபகமாக்கியும், காண் என்பதனை யிரண்டிற்கு மிறுதிவிளக் காக்கியும், மனத்தாலென்பதனை யெச்சமாக விரித்தும், மென்மையினிமை யென்பவற்றை முன்னையதற்கு முதனிலைத்தீபகமாக்கியுங் கொள்க. சொற்கடினம் - வல்லினம் வல்லொற்றடுத்து மிகுதல். பொருட் கடினம் - பயங்கரமாகிய பொருள்பயத்தல்.

(14)

79. இடையிட்டனவாகுமின்சொற்பொருளாற்
றடையற்றொழுகுவபாஞ்சால--மடைவடைவே
யக்கவிகள்பாடுமவர்க்கங்கவைபெயராய்
மிக்குலகங்கூறும்விதித்து.

(எ-ன்) ஒழிந்த பாஞ்சாலத்தின்பாகுபாடும் அக்கவிகள் பாடு வோர்க்கெய்துங் காரணப்பெயருமாமாறுணர்-ற்று.

(இ-ள்) மென்மையுங் கடினமுமாகிய வைதருப்பகௌடங்களோடுங் கூடாதே யிடைநிலைப்பட்டவா மினியசொல்லானும் பொருளானுந் தடையின்றி நடைபெற்றொழுகுமது பாஞ்சாலபாகமாம். முறை முறையே அக்குணக்கவிகள் பாடுவோர்க்கு மங்கங் கதுவேபெயராக விதித்து மிக்க பெரியோராற் கூறப்படு மென்றவாறு. அவை வைதருப்ப கவி கவுடகவி பாஞ்சாலகவி என்பனவாம்.

இவற்றிற்கெல்லாஞ் செய்யுள் வருமாறு :-

பதியுமாமுகில்கரிப்படாமுமாய்ப்புன
னதியுமாய்ப்படுகதிர்நான்றவேணியாய்
மதியமாமுளைமதிமதியமாய்த்தமிழ்ப்
பொதியமானதுசிவன்போலுமானதே.
(68)

உந்தியங்கமலமேலுதிப்பதாலுரஞ்
சிந்துதெள்ளருவிவெண்ணூலின்செம்மைத்தாய்ப்
பந்திசேர்திசைமுகம்பயிலும்பான்மையாற்
சந்தமால்வரைமறைத்தலைவனொத்ததே.
(69)