விண்டுவென்றுரைப்பதால்விண்ணினோங்கியே பண்டுலகளந்தமெய்ப்படிவங்கூர்ந்தடிக் கொண்டநீர்பகிரதிக்கோதையொத்ததால் வண்டுழாய்மலைந்தசெம்மலையுமொத்ததே. | (70) |
இவைமூன்றும் வைதருப்பபாகம். திணை - பாடாண். துறை - மலைவருணனை. முப்புரத்தினைச்செகுத்தமுக்கணக்கனிற்சிரித்து முத்தலைக்கணிச்சியுக்கதாற் றப்பறப்பொருப்பினைக்குலுக்கிடக்கையைச்செருத் தலத்துறப்புடைத்துருத்தெழா நெய்ப்புறத்தினிற்குளித்தவச்சிரத்தினைப்பிடித்து நெட்டுயிர்ப்புயிர்த்தியக்கவே குப்புறப்புழைக்கைவெற்பின்மத்தகத்தினைத்துளைத்த கொப்புளித்தபச்சிரத்தமே. | (71) |
மத்தகத்தழுத்துவச்சிரத்தினைப்பறித்துயர்த்தி மத்தவெற்புடற்றிநிற்பதா னத்தகத்தடக்குமைக்கடற்கடைக்கனற்சினத்த னச்சுளத்தினுற்றெதிர்ப்பவே பித்தகத்தழைத்தடற்பொறிப்புலிப்புலத்தினுற்ற பெற்றமொப்பவட்கியுட்குநீ டுத்தமச்சுவர்க்கமுற்றகொற்றவற்கிமைப்படுத்த வொத்தபத்துடைச்சதக்கணே. | (72) |
புற்புதக்கடக்கவுட்பொருப்புவச்சிரத்தினைப் புழைக்கையிற்புடைத்தியக்கவே யுற்றதுக்கிரச்சமர்க்குடக்குமிக்குரத்துரத் துடைத்ததைப்பறித்துருத்திடா வற்புதத்தெதிர்த்தியக்கநெட்டடிக்குளுற்றதொற்றை யக்களிற்றைவிட்டுமுட்டவே தெற்குவெற்பினைத்துளைத்ததப்புறப்புறக்கொடைத் திசைக்களிற்றினைத்துளைத்ததே. | (73) |
|