இவைமூன்றுங் கௌடபாகம். திணை - தும்பை. இவற்றுள், முப்புரத்தினையென்றது ஏமவெருமை. ஏனையிரண்டும் யானைமறமும் ஏமவெருமையுமாம். விரைக்கமலமுறுக்குடைந்ததகட்டகட்டினடுப்பொகுட்டு வெண்டோட்டும்பர் நிரைக்கமலத்தினிதிருந்துசூட்டெகினம்பார்ப்பருத்த நினைத்துநீர்வா யிரைக்கெழவேசெங்கால்வெள்ளுகிருறுமுன்னிதழுரிஞ்சி யிழிந்ததீந்தே னரைக்குடுமிமறைக்கிழவனெருப்பிடைநெய்யுகுப்பனபோ னான்றமாதோ. | (74) |
மாதண்டர்புகழ்ந்திடவாழ்ந்தருள்வாமபாகத்து மழைதோய்வெள்ளி வேதண்டமிசைப்பவளவேதண்டம்பகிரண்டம் விழைவுகூர்வான் மூதண்டமுகடுதொடுமும்மதிளின்முரண்முருக்க முன்கைக்கொண்ட கோதண்டவடவரைபோற்பணைத்தகெந்தமாதனமாங் குன்றொன்றுண்டே. | (75) |
நெய்த்திருண்டுசுருண்டுகடைகுழன்றறலின்கெழுதகைத்தாய் நெறித்துநீண்டு மொய்த்திருக்குங்குழற்காட்டின்முகையவிழ்பூந்துணர்விரையு முற்றாமுன்ன ரெய்த்திருக்குமிடைக்கிடர்மேலிடரிழைக்குந்தமர்போலு மிறுமாந்தொண்பூண் வைத்திருக்குமுலைமுகட்டிற்பொதிகளபத்தொளிவிரையும் வளைந்தமன்னோ. | (76) |
இவைமூன்றும் பாஞ்சாலபாகம். முதற்பாட்டு நாடுவாழ்த்து. இரண்டாவது மலைவருணனை. மூன்றாவது குழல்வருணனை. இவை யொன்பதுங் குருகாமான்மியம். இவை மூன்றுபாகமும் பலவடி |