யான்வரு மொருசெய்யுளின்கண்ணே பலவடிதோறும் விரவியும் பேதித்தும் வருவனவு முள. அவையும் மேற்காட்டுதும். (15) | 80. | இன்பந்தெளிவுசெறிவுசமனின்னிசையே நன்சொலுதாரநவின்றவலி--மன்காந்தந் தையலுய்த்தலில்பொருண்மைசாற்றுஞ்சமாதியுட னையிரண்டும்வைதருப்பமாம். |
(எ-ன்) எடுத்தமுறையானே வைதருப்பத்திற் கெய்துவனவாங் குணவலங்காரங்கட்குப் பெயரும் முறையும் தொகையும் உணர்-ற்று. (இ-ள்) இன்பமுந் தெளிவுஞ் செறிவுஞ் சமனிலையு மின்னிசையு முதாரமும் வலியுங் காந்தமு முய்த்தலில்பொருண்மையுஞ் சமாதி யென்பதோடும் பத்தும் வைதருப்ப குணவலங்காரமாமென்றவாறு. (16) | 81. | ஏனைக்கவுடமிவையீரைந்தொடுங்கூடா மானைப்பழித்தமதர்விழியாய்--நூனயந்திங் கெண்ணியபாஞ்சாலமிவைகட்கிடைப்பட்டு நண்ணியதோர்சால்புடைத்தாநான்கு. |
(எ-ன்) ஒழிந்தனவாங் கௌட பாஞ்சாலங்களும் அக்குணவலங்கார மேற்குங் கூறுபாடுணர்-ற்று. (இ-ள்) ஒழிந்த கௌடமு மிங்ஙன மெண்ணப்பட்ட பத்தி னோடுங்கூடாது நடக்கு மிலக்கணத்தவா மென்றவாறு. பத்தினோடுங் கூடாதெனவே யும்மை யெச்சமாதலாற் சிலவற்றோடுங் கூடியும் வருமென்பதாம். பாஞ்சாலமு மப்பத்தினோடும் வைதருப்ப கௌடங்க ளோடுங் கூடா திடைப்பட்டுநடத்தலைப்பொருந்து மொழுக்கத்தினை யுடைத்தென்றவாறு. இவைகட்கும் என்னும் உம்மை யிறந்தது தழீஇய எச்சவும்மையாம். (17) | 82. | சொல்லாற்பொருளாற்சுவையுறலின்பந்தெளிவு மொல்காப்பொருள்புலப்பாடொண்செறிவு--நல்லா யெழுத்தோரினஞ்செறிதலெல்லாவெழுத்தும் வழுத்தீர்ந்துறல்சமனுமாம். (18) |
|