பக்கம் எண் :

84மாறனலங்காரம்

83. இன்னிசையதின்னிசையாமேய்ந்தவுதாரங்குறிக்கொள்
சொன்னடையால்வேறுபொருடோன்றலா--நன்னுதாஅல்
வாய்ந்ததொகைமிக்குவருதல்வலிகாந்த
மாய்ந்தொன்றனையுயர்த்தலாம்.

(19)

 
84. செய்யுட்பொருளைத்தெளியவிரித்தற்குரிச்சொல்
லெய்துநடைத்துய்த்தலில்பொருண்மை--தையலா
யோங்குஞ்சமாதியுவமேயத்தின்வினையை
யாங்குவமைக்கேற்றுவதொன்றாம்.

(இவைமூன்றுசூத்திரமு முடனெழுதப்பட்டன. )

(எ-ன்) இவை யின்பமுதற் சமாதியீறாய பத்து மாமாறுணர்-ற்று.

(இ-ள்) சொல்லினாலும் பொருளினாலு மினிமையுறவருதல் இன்பமாம். தெளிவென்பது கவியாற் கருதப்படும்பொருள் கேட்போர்க்குக் குறிப்புமொழியின்றி வெளிப்படைமொழியாகத் தோன்றுவதாம். ஒள்ளியசெறிவும், மூவினமாகிய எழுத்து ளோரின மிகுந்து செறியப் பாடுவதாம். ஒள்ளியசெறிவென்றதனால் எழுத்தானாகிய சொல்லானாய பொருள் செறிதலுங் கொள்க. சமனிலை மூவினமும் விரவப் பாடுவதாம். இரட்டை துணிவு. இன்னிசையும் அவ்வவ் செய்யுட்கேற்ற சொன்னடையாற் பாடுவதாம். உதாரமும் செய்யுட் சொன்னடையால்வரும் பொருளன்றி யதன் குறிப்பினால் வேறுபொருடோன்றுவதாம். வலியும் தொகைநிலைச்சொன் மிக்குவருவதாம். காந்தமும் ஒன்றனை யுயர்த்திப்புகழுங்கா லுலகநடையிறவாமை யாராய்ந்துயர்த்துவதாம். உய்த்தலில்பொருண்மை கவி தன்னாற்கருதிய செய்யுட்பொருளை விளங்க விரித்துக் கூறுவதற்குப் பிறிது மொழிபெய்துகூட்டா ததற்குரியசொற்கள் செய்யுளகத்துளவாம்படி பாடுவதாம். சமாதி உவமேயத்தின்வினையை யுவமைக்கேற்றுவதோரிலக்கணத்ததா மென்றவாறு. இதனைச் சாற்றுஞ் சமாதியென்றதனாற் குணவலங்காரங்கள் பத்தினுள்ளு மிதுவே சிறந்த குணவலங்கார மென்பதூஉ மிஃது மூன்றுநெறியார்க்கு மொக்குமென்பதூஉ மாயிற்று.