இவற்றிற்கெல்லாம் எண்ணும்மை யிடையிட்டுவந்தன. ஆம் என்பதனைச் சூத்திரந்தோறு மிறுதிவிளக்காகக் கூட்டுக. நல்லாய், நன்னுதாஅல், தையலாய் என்பன மகடூஉமுன்னிலை. தையலென்பது அண்மைவிளி. அவற்றுள், சொல்லின்பமாவது அடை சினை முதலென முறைமூன்று மயங்காமை வரும் வண்ணச்சினைச்சொற்களும் முதலொடு குணமிரண்டடுக்கிவரும் அடைசொற்களுஞ் சினையொடு குணமிரண்டடுக்கி வரும் அடைசொற்களும் வழக்கிடமுஞ் செய்யுளிடமுமாக விரண்டிறந்தனவா யடைபல வேண்டினவழியேபுணர்ந்தசொற்களுடன், வழிமோனை முதலியன வரத்தொடுப்பனவாம். அவற்றாற் கேட்டோர் பெறு மின்பம் சொல்லின்பம். பொருளாவன :- அறம் பொருள் இன்பம் வீடென்பன. அப்பொருளால்வரு மின்பமாவது மலரின் மதுக்காரணமாக மதுகரங்கட்கு வரு மின்பம்போலக் கவிப்பொரு ளுட்கொண்டோர்க்குவரு மின்பமாம். னெவே யவ்விரண்டினுள், பொருளணியுள்ளு முக்கியமான பொருளணி யுடைத்தாய்ப் பாடுவதே பொருளின்பமாம். இனிச் செய்யுள் வருமாறு :- வெண்டிரைப்புனலறாவியலயல்வயல்விரி வண்டிமிர்பாசடைக்குவளைமென்பனிமலர் புறக்கொடைமதிதரப்பொதியவிழ்ந்ததுபோய்ச் சிறக்கணித்தனவாஞ்சேயிதழ்க்குமுத முட்டாட்டாமரைமுறுக்குடைநாண்மலர்க் கட்காமருகடைவாய்வழிந்திழிதா மேய்தருகயவாய்மேதிகன்றுள்ளுபு பணைமுலைசுரந்துபனித்தபாற்றடினி நெடுவெண்டிங்கணிறைமறுத்துடைத்தொளிர் செந்தளிர்ப்பூஞ்சுனைத்தேமாத்துகுகனி முடப்பரியரைப்பலாமுட்புறக்குடக்கனி புறக்காழ்மரகதப்பூகமிடற்றி னிறக்காழ்திரண்டுநீண்டுதிர்பழுக்காய் நெட்டிலையரம்பையினீடுபொற்கூன்கனி புதையிருடுரீஇக்கதிர்பொழிநவமணிக்குவை சுழித்தெடுத்திரைத்தவாய்த்தூமலர்பலகொடு |
|