பாற்கடல்பொன்னியுட்படிதிருவுருவங் காண்பதின்முன்னியகாட்சியொன்றெனலாய்த் துறைதொறுந்துறைதொறுந்துழனியின்வளைக்குந் திருவரங்கேசனைத்திருமறுமார்பனை மனத்துறநினைந்தும்வாழ்த்தியும்வணங்குந ரெக்குலத்தெவரேயாயினு மக்குணத்தவர்க்கடியேனடியேனே. | (77) |
இந்நேரிசையாசிரியப்பாவினுள் நால்வகை யடைசொற்களும் வந்தவாஞ் சொல்லின்பத்தோடும் பொருளின்பமும் வந்தமையா லிது சொற்பொருளின்பம். இதனு ளீரடை முதலொடுஞ் சினையொடும் புணர்ந்தன வைதருப்பம். இரண்டிறந்த மூவடை புணர்ந்தன பரஞ்சாலம். இரண்டு மூன்று மிறந்த பலவடை புணர்ந்தன கௌடச்சொல்லின்பம். ஆதலாற் சொல்லின்ப மூன்றுபாகமும் அவற்றோடு மூன்றுநெறியார்க்கும் ஒரு தன்மைத்தாம் பொருளின்பமும் பல வடியான்வந்த ஒரு செய்யுளகத்துக் காட்டியவாறு கண்டுகொள்க. இதனுட் பொருளணியாவது தற்குறிப்பேற்றவுவமை. திணை - பாடாண். துறை - நாடுவாழ்த்து. பொன்னசலந்திரண்டிரண்டாம்பொருவமர்தோட்கமலக்கட் பொலிந்துநின்றா ரன்னவயற்குருகூரரணிவரைவாழ்மதர்நெடுங்க ணணியிழாய்கேண் மின்னிடையார்புறந்தருநாண்மிகுகாமக்கடலாழ்ந்த மிக்கோர்தங்கண் மன்னுயிரைத்தரும்புணைதான்மலிதிரைநீர்க்கடலிடத்தார் மடலென்பாரே. | (78) |
இது வைதருப்பச்சொல்லின்பம். பகுதி-மடல். துறை-உலகின் மேல்வைத்துரைத்தல். இவ்வாறு பொழிப்புமோனையாய்வருத லின்னா தெனவேண்டுவர் கௌடர். குயிலாருங்குளிர்பொழிற்றென்குருகேசன்குழகனுயர் குன்றிற்குன்றாக் |
|