பக்கம் எண் :

மூலமும் உரையும் 11

குழகர் மெய் அழகர்-திருமுக்கூடலில் எழுந்தருளியிருக்கும் அழியா இளமையும் அழியா அழகும் உடைய அழகரின், பள்மூவகைத் தமிழ்க்கு-பள்ளேசலாகிய முத்தமிழ் நூலுக்கு, பத்தாகப் பெயர்தரும் உயர்தரும் பத்தாளில்-பத்துப் பேராகப் பெயர்பெற்ற உயர்ந்த பத்தர்களாகிய பத்து ஆழ்வார்களுள், பருதியர்-ஞாயிறுபோல் முதன்மையாக விளங்குபவரும், சுருதியர்-மறை முழுதுணர்ந்தவரும், பட்டோலைக்கு எழுதுஅரும்-சிறந்த ஓலையில் எழுதுதற்கு அரிய, முழுது உணர்-மெய்ப்பொருள்நலம் முழுதும் உணர்ந்த, பா வகுத்து உரைத்தோர்-திருவாய்மொழியாகிய பாடல்களை வகுத்து உரைத்த நம்மாழ்வார், நத்து ஓலம் குருகையில் வருகையில்-சங்கு முழங்கும் திருக்குரு கூராகிய ஆழ்வார் திருநகரியில் தோன்றியருளியபோது, நப்பு ஆக புளிநடு வெளிபடு-விருப்பமாகத் திரு உறங்காப் புளிய மரத்துப் பொந்தின் நடுவில் தோன்றுகின்ற, நல் போதத்து அருள்பொழி திருவிழி-நல்ல பேரறிவு தரும் அருள்மொழிகின்ற அழகிய திருக்கண்கள், எனக்கு ஞானவித்து-எனக்கு மெய்ப்பொருளை உணர்த்தும் மெய்யறிவு முளைப்பதற்குக் காரணமாகிய ஞானவித்தாகும் (எ-று. )

(வி - ம். ) திருமகளை மனத்தகத்தும் மார்பகத்தும் சுமந்து நோக்கிக் கொண்டிருக்கும் அழகரின் முத்தமிழ்ப் பள்ளேசல் நாடகத்திற்குப் புளியமர்ந்த நம்மாழ்வாரின் அருள்பொழி திருவிழி ஞானவித்தாக நின்று அருள்புரியும் என்பது.

நத்தேவர் குருகை என்ற பாடத்திற்கு, விரும்பப்படும் தெய்வத் தன்மை வாய்ந்த குருகூர் என்க.

நற்றோகைக் குருகை என்ற பாடத்திற்கு, நல்ல மயில்கள் மலிந்த குருகூர் என்க.

முற்றேவிற்பெரியவர், பற்றாகப்பெயர் தரும், பற்றாளில் என்ற வேறு பாடங்களும் காணப்படுகின்றன.

பத்தாரிற் பருதியர் என்பதும் பாடம்.

கமலை-கமலத்திருப்பவள். விமலை-மலமற்றவல், வித்தாரம் சதுரப்பாடு அல்லது சிறப்பு.

“இந்திரன் முதலிய இறையவர் பதம்” என்பது காண்க.

(4)