நூல் பள்ளியர் வரவு கொச்சகக் கலிப்பா 5. | காவலராந் தேவரைமுன் கைதொழுது பின்னருமென் ஆவலினா லேயழகர் ஆசூர் வளநாடு சீவலநன் னாடுமிசை தேர்ந்துரைக்கப் பண்ணைதனில் ஏவலுறும் பள்ளியர்வந் தெய்தியது சொல்வேனே. |
(இ - ள்.) எம்மைக் காப்போராகிய விளங்குந் தேவர்களை முதலில் கைகுவித்து வணங்கி, மேலும் என் ஆவலால் முக்கூடலழகரின் ஆசூர் வளநாடாகிய வடகரை நாட்டைப் பற்றியும், சீவலமங்கை நன்னாடாகிய தென்கரை நாட்டைப் பற்றியும், இசைத் தமிழ் ஆராய்ந்து உரைப்பதற்கு, முதற்கண் முக்கூடல் நகர்ப் பண்ணைகளில் பயிரிடுவதற்குக் கட்டளை பெற்றுள்ள பள்ளியர்கள் வந்து சேர்ந்ததைப் பற்றிச் சொல்லுவேன்; (எ-று. ) (வி - ம். ) ஆசூர் வடகரை நாடென்பதுமுக்கூடல் நகரைத் தன்னகத்தே கொண்டு பொருநையாற்றின் வடகரையில் விளங்கும் நாடு. சீவல மங்கைத் தென்கரைநாடு என்பது, மருதூரைத் தன்னகத்தே யுடையதாய்த் தண்பொருநை யாற்றுக்குத் தென்பாலுள்ளது. (5) முக்கூடற் பள்ளி சிந்து இராகம் : பந்துவராளி. தாளம் : அடதாளம் 6. | நெற்றியி லிடும் மஞ்சணைப் பொட்டும் மற்றொரு திருநாமப் பொட்டும் நெகிழ்ந்த கருங் கொண்டையும் ரெண்டாய் வகிர்ந்த வகுப்பும் |
|