பக்கம் எண் :

மூலமும் உரையும13

 பற்றிய கரும்பொற் காப்பும் கையில்
வெற்றிலையும் வாயில் ஒதுக்கிய
      பாக்கும்ஒரு சுருளுக் கொருக்கால்
      நீக்கும் இதழும்
வெற்றிவிழிக் கெதிர் கொண் டிருகோ
டுற்ற கருப் பின்னு மெதிர்ந்தால்
      விரிந் திடுமென் றெண்ணிச் சற்றே
      சரிந்த தனமும்
சிற்றிடையும் செம்பொ னிடைக்கிடை
பெற்றிடும் பட்டாங்கு மிலங்கத்
      திரு முக்கூடல் வாய்த்த பள்ளி
      தோன்றினாளே.

(இ - ள்.) நெற்றியில் இரண்டு புருவத்திற்கும் இடையில் மங்கலமாக வைத்த மஞ்சணைப் பொட்டும், அதற்குச் சிறிது மேலே வேறாகத் திருமண்காப்பினால் இட்ட பொட்டும், பின்னாலே நெகிழ்ந்து தொங்கும் கருமையான கொண்டையும், உச்சியில் இரண்டாய் வகிர்ந்த வகுப்பும், கையில் பொருந்தி விளங்கும் இரும்புக் காப்பும், அந்தக் கையில் பிடித்தவெற்றிலையும், வாயில் பாக்கு ஒதுக்கிய தோற்றமும், வாயில் மடித்து வைக்கும் ஒவ்வொரு வெற்றிலைச் சுருளுக்கும் ஒவ்வொரு முறை நெளிந்து ஒதுங்கி விலகும் வாய் இதழ்களும், தன் மார்பில் பொருந்தி நிமிர்ந்த இரண்டு கொங்கைகளின் இரண்டு உச்சியும் தன் வெற்றி விழியை நோக்கி நிமிர்ந்து எதிர்கொண்டதால் அந்த விழிகளின் கருமை தாக்க நுனியில் அடைந்த கருமை நிறங்கள், இன்னும் நிமிர்ந்து நோக்கினால் மிகவும் விரிந்திடுமென்று நினைத்துச் சிறிது சாய்ந்த கொங்கைகளும், ஒடுங்கிய இடையும், அந்த இடையில் உடுத்த, எடைக்கெடை தங்கத்தின் விலைபெறும் பொற்பட்டும் ஆகிய இவைகளெல்லாம் இலங்கித் தோன்றத் திருமுக்கூடலுக்குச் சிறப்பாக