வாய்த்த மூத்தபள்ளி நாடக அரங்கத்தில் வந்து தோன்றினாள்; (எ-று. ) (வி - ம். ) ஒரு நாடக மன்றம். அதில் பள்ளு நாடகம் நிகழ்கின்றது. மூத்த பள்ளி இவ்வாறு வந்து நிற்கின்றாள். முக்கூடல் வாய்த்த பள்ளி தோன்றினாள் என்று கவிஞர் நமக்கு அறிமுகப் படுத்துகின்றார். நாம் நேரிற் கண்ட காட்சியைத்தான். கோடு-கொங்கையின் உச்சி; மலைபோன்ற அல்லது யானைக் கொம்புபோன்ற கொங்கைகள் எனினுமாம். எதிர்கொண்டெதிர் கொண்டு என அடுக்குத் தொடராகவும் பாடம் உண்டு. சிறிது மூப்பினால் கொங்கைகள் மெல்லச் சாய்த்துள என்பதைக் கொங்கைக் கண்கள்முகக் கண்களை நோக்கி நிமிர்ந்து பார்த்து அந்த விழிக் கருப்பால் தாக்குண்டு கருமையடைந்தன என்றும், மீண்டும் நோக்கினால் இன்னும் கருமை நிறம் விரியுமென்று அஞ்சிச் சிறிது சாய்ந்தன என்றும், கவிஞர் தற்குறிப்பேற்றம் செய்தனர் என்க. தற்குறிப் பேற்ற அணி. பட்டாங்கு-ஒருவகைப்பட்டு பட்டாங்கு மிலங்க என்பதைப் பட்டும் ஆங்கு அஃதாவது அவ்விடையில் உடுத்தப்பட்டு விளங்க எனினுமாம். செம்பொன் இடைக்கிடை பெற்றிடும் பட்டு என்பதற்குச் செம்பொற்சரிகை இடையிடையே போடப்பட்ட சரிகைப்பட்டு என்றும் கொள்ளலாம். இடை என்பதனை எடை என்பதின் திரிபு என்றுகொண்டு முதலில் உரைக்கப்பட்டது. கொச்சகக் கலிப்பா 7. | உள்ளத்தி லூசலிடும் உல்லாசப் பார்வைவிழிக் கள்ளத்தி னாலிரும்புங் கல்லுங் கரையாதோ வெள்ளத்தி லேதுயில்கார் மெய்யழகர் முக்கூடல் பள்ளத்தி யார்அழகு பார்க்க முடியாதே. |
(இ - ள்.) பார்த்தவருடைய மனத்தில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும்படியான உலாவிய பார்வையுடைய விழியின் கவர்ச்சியினால் இரும்பும் கல்லும் கரையும்; பாற்கடலென்று சொல்லப்படும் இன்ப வெள்ளத்திலே துயில்கின்ற கருமையான மேனியை உடைய அழகரின் திருமுக்கூட |