லில் தோன்றிய பள்ளத்தியரின் அழகுபோல் வேறு எங்கும் காணமுடியாது; (எ. று. ) (வி - ம். ) கள்ளம்-கள்ளுகின்ற தன்மை; அஃதாவது கவர்கின்ற இயல்பு. களித்த நோக்கம் என்றும் கள்ளத்தனமான நோக்கம் என்றும் பொருள் கொள்க. ஈண்டுக் கள்ளமானது அவளுடைய காதலனின் மனத்தைக் கவர்கின்ற கற்புடைமையுடன் கூடிய கள்ளம் என்க. பள்ளத்தியர் அழகு பார்க்க முடியாதே என்பதற்குக் கண்ணுக்கு அடங்காமையாற் கண்கொள்ளாக் காட்சி என்றும், அவளுடைய விழிக்கெதிர் நோக்க முடியாத இயல்பினால் பார்க்க முடியாது என்றும் கூறலாம். (7) மருதூர்ப் பள்ளி சிந்து இராகம் : பயிரவி : தாளம் : ரூபகம். 8. | செஞ்சரணப் படமிடுங் கொச்சியின் மஞ்சளும்பூம் பச்சையும் மணக்கச் சிறியநுதற் பிறை வெண்ணீற்றுக் குறி யொளி வீசப் பஞ்சலைமீன் கெண்டைகள் எனவே அஞ்சனந்தோய் கண்கள் இரண்டும் பக்கக் கொண்டையினும் குழையினுந் தைக்கக் குதிக்க நெஞ்சுகவர் கனதன மாமதக் குஞ்சரவிணைக் கோடுகள் அசைய நீலவடக் கல்லுடன் கோவைத் தாலியும் இலங்க வஞ்சிமருங்கி லணிதரும் பட்டும் பஞ்சவணத் தழகுந் துலங்க மருதூர்க்கு வாய்த்த பள்ளி தோன்றி னாளே. |
|