பக்கம் எண் :

மூலமும் உரையும்17

(வி - ம். ) போதில் ஒரு பூவில் பயிராம் என்ற முரண்டொடைநயத்தை ஓதி உணர்க. பூவும் பயிராகும் என்ற முரணும் ஒரு பூவில் ஐந்து பூவும் என்ற நயமும் காண்க. ஒரு பூவில்-ஒரு போகத்தில். ‘மள்ளருக்கே தோன்றி வயலுற்று நட்ட’ என்றும் பாடம்.

(9)

பள்ளன் வரவு
சிந்து
இராகம் : சுருட்டி. தாளம் : ஆதி.

10. கறுக்குங் கடாய் மருப்பின்
முறுக்கு மீசையும்--சித்ரக்
      கத்தரிகை யிட்ட வண்ணக்
      கன்னப் பரிசும்
குறுக்கில் வழுதடி சேர்த்
திருக்குங் கச்சையும்--செம்பொற்
      கோலப் புள்ளி் யுருமாலும்
      நீலக் கொண்டையும்
சறுக்குந் தொறுங் குதிப்பும்
சுறுக்குந் தலை--யசைப்பும்
      தடிசுற்றி ஏப்ப மிட்டே
      அடிவைப் பதும்
மறுக்கும் மதுவெறிகொண்
டுறுக்குஞ் சிரிப்புந் தோன்ற
      வடிவழகக் குடும்பன்வந்து
      தோன்றினானே.

(இ - ள்.) சீற்றங் கொள்ளும் ஆட்டுக்கடாயின் கொம்பு போன்ற முறுக்கு மீசையும், அழகிய கத்தரிக்கோலால் வெட்டிவிட்ட அழகான கன்னத்துப் பக்கத்தின் எழிலும், இடுப்பில் வழுதடி என்ற ஒருவகைப் படைக்கலத்துடன் சேர்த்து இறுக்கிக் கட்டிய கச்சையும், செம்