பொன்னாலாகிய அழகிய புள்ளியுள்ள உருமால் என்ற அணியும், நீலநிறக்கொண்டையும், காலில் ஏதேனும் இடறிச் சறுக்குந்தோறும் குதித்தலும், சுறுக்கென்று ஏதேனுந் தைக்குந் தோறும் தலையசைத்தலும் உடையவனாகித் தடியைச் சுற்றி ஏப்பமிட்டுக்கொண்டு மெல்ல அடிவைப்பதும், அறிவை மறுதலைப் படுத்தும் கள்வெறி கொண்டு காரணமின்றி உட்கும்படி செய்கின்ற சிரிப்புந் தோன்ற வடிவழகக் குடும்பன் வந்து நாடக மன்றத்தில் தோன்றினான்; (எ-று. ) (வி - ம். ) கன்னப் பாரிசு, கன்னப் பரிசு என இரண்டு பாடம். வளைதடி வழுதடி எனவும் பாடம். கடாய், கிடாய் எனவும், முறுக்கு மீசையும், முறுக்கும் வீசையும் எனவும் பாடங்கள் உண்டு. குறுக்கில் வளை தடி சேர்த்து என்பதைத் தனியாகக் கொண்டு, பின் பக்கத்தில் குறட்டுக் கம்பை வைத்து அதன் பின் இரண்டு கைகளையும் தொங்கவிட்டு என்றும் ஒரு பொருள் கொள்க. “சுறுக்குந் தொறுங் குறிப்பும் சறுக்குந் தலையசைப்பம்” என்றும் பாடம் உண்டு. (10) பள்ளன் தன் பெருமை கூறல் 11. | ஒருபோ தழகர்தாளைக் கருதார் மனத்தைவன்பால் உழப்பார்க்குந் தரிசென்று கொழுப்பாய்ச்சுவேன் சுருதிஎண் ணெழுத்துண்மைப் பெரியநம் பியைக்கேளாத் துட்டர்செவி புற்றெனவே கொட்டால் வெட்டுவேன் பெருமாள் பதிநூற்றெட்டும் மருவி வலம்செய்யார் தம் பேய்க்காலை வடம்பூட்டி ஏர்க்கால் சேர்ப்பேன் |
|