அத்தகைய மணிக்கோல் கொண்டுகூட்டத்தை விலக்கும் சேனை முதலியாரை; முன் இடில்-யாம் நினைத்து வழிபடுவோமெனின், பிறர் ஏன் செய்வார்-மற்றையோர் எம்மை யாது செய்யவல்லர்? (எ-று. ) (வி - ம். ) தேவர்களின் முடிமேல் உள்ள பூவின் மேல் அடித்தமையால் அந்தப் பூவிலுள்ள தேன் கைக்கோலில் மினுங்கிக் கொண்டிருக்கும் என்க. சீல மணிக் காலனை இலகும் என்ற பாடத்திற்கு அந்தத் தேவர்கள் வணங்கும்போது முடியிலுள்ள மலரின் தேன் அழகிய காலிலணைந்து விளங்கும் சேனை முதற்கோன் என்க. ஆர்வலன் என்றும், தாரணை செய்யும் என்றும், கோலணி விலகும் என்றும், முனடில் என்றும் வேறு பாடங்களும் உள. தாளவிதத்து ஏழ் அணி கெடினும்-தாளத்தின் வகையாகிய ஏழ்வகை அழகுகள் கெட்டாலும், புலவோர் தள்ளார்-புலவர்கள் இகழமாட்டார்கள். உறினும், வரினும், கெடினும் என்ற செயின் என்னும் வாய்பாட்டு வினையெச்ச அடுக்குகளில் வந்த எதிர்மறை உம்மைகளால் குற்றங்கள் வாரா என்பதே தேற்றம் என்க. புலவோர் அறிஞராதலின் எம்மை இகழார். தேவரையும் அடிக்கும் ஆற்றல் வாய்ந்த சேனை முதலிகளை வழிபடின் பின்னை மற்றையோர் எம்மை என்ன செய்ய வல்லுநர்; அவரும் ஆற்றலொடுங்கி இகழுந் தொழிலைவிட்டு நீங்குவாரென்பது.
"வானவர் மகுட கோடிப், பந்தியின் மணிகள் சிந்த வேத்திரப் படையால் தாக்கினார்" நந்தி யெம்பெருமான் என்பதுபோன்று, சேனை முதலிகளும் செய்தனர் என்க.
"மண்ட லீகரை நந்தி பிரம்படி மகுட கோடியிற் புடைக்கவே" என்பதும் காண்க. நம்மாழ்வார் தத்தானத் தனதன தனதன தத்தானத் தனதன தனதன தத்தானத் தனதன தனதன தானனத் தனத்தா |