பக்கம் எண் :

112பாயிர விருத்தி

இனிச் சிறப்புப் பாயிரவகை உரைத்தல் உரைக்கற்பாற்று.

அவ்வகை ஆக்கியோன் பெயர் முதலாக முன்னர்க் கூறின எட்டு.

அவற்றுள் மலை, தன்கண் பொருளைப் பிறர் வித்திடாமல் தானே படைத்தலின் தன்னியல்பையும், வித்து ஒன்றும் இன்றிவறிதாய நிலத்துப் புதிதாகப் படைத்தல் இல்லாது முன்னர் வழிவழியாகத் தொன்றுதொட்டு வந்த வித்தினைக் கொண்டே படைத்தலின் தான் படைத்த பொருள் காரணத்தையும் காட்டலின், ஆக்கியோன் பெயரும் வழியும் இவ்வாறாமென அவற்றை உணர்த்தல் உடைத்து.

நிலன், தன்னிடத்துள்ள பொருளுக்கு நாற்பக்கத்தும் வரம்பாகிய எல்லை காட்டலும் அவ்வரம்பின் உட்பட்ட பொருளை இது நெல், அது கரும்பு, உது வாழை என வேறுவேறு பெயர்குறித்துக் காட்டலும் உடைமையின், எல்லையும் நூற்பெயரும் இவ்வாறாமென அவற்றை உணர்த்தல் உடைத்து.

பூ, தன் முதல்பொருளாகிய கொடி முதலாயவற்றின் வேர் முதல் நுனிவரைப் பரவியிருந்த சாரத்தைத் தேன் எனத் தன் காம்பின்கண் தொகுத்துக் காட்டலும், பிண்டமாகிய தன்னை அரும்பு எனவும் நாளரும்பு எனவும் மலர் எனவும் காரணகாரிய முறையான் விரித்துக் காட்டலும், காரணகாரிய முறை இன்றி, இனம்பற்றி மகரந்தங்களை ஓரிடத்துத் தொகுத்தும் ஓரிடத்து ஒன்றுபட்டிருந்த இதழ்களைப் பல இடத்துப் பிரியுமாறு விரித்தும் காட்டலும், தன்னைத் தன் இடமாகிய கொடிமுதலாயவற்றினின்று பறித்துப் பெயர்த்து நாரால் கட்டிக் கூந்தல் முதலாய பிறிதிடத்து வைப்பினும் பூ என்னும் தன் பொருண்மை கெடாமையும் உடைமையின், தொகுத்தலும் விரித்தலும் தொகைவிரியும் மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தலும் என யாப்பின்வகை இவ்வாறாம் என்பதூஉம் உண்ணும் முன்னர்த் தும்பிக்குத் தேன் உளது என்றும் சூடும் முன்னர் மக்கட்கு மணம் உளது என்றும் தன்னிடத்துக் காட்டலின் நூல் நுதலிய பொருள் என்பது இவ்வாறாம் என்பதூஉம் உணர்த்தல் உடைத்து.

துலாக்கோல், தான் நிறுத்த பொருளை ஒப்பத் தக்கதோ ஒப்பத் தகாததோ என அதனை ஆராய்வான் ஒரு காரணிகற்குக் காட்டிய பின்னரே அதனைத் தன்னினின்றும் வெளிப்படுத்தலின், நூலைக் கேட்டுக் குற்றமின்மை ஆராயும் காரணிகர் இன்னராம் எனக்