பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்113

காட்டல்வேண்டும் என்பதூஉம், அப்பொருள் அளித்த தனக்குப் பயன் அதற்குரிய விலைப்பொருள் எனவும், அப்பொருள் பெற்றார்க்குப் பயன் பசியும் நோயும் தீர்தலும் பிறவுமாம் எனவும் முன்னரே காட்டலின் ஆக்கியோனுக்குப் பயன் அறம் பொருள் இன்பமும் புகழும் பிறிதுமாம் என்பதூஉம், அதனைக் கற்றானுக்குப் பயன் இம்மை மறுமைத் துன்பம் நீங்கலும் பிறவுமாம் என்பதூஉம் உணர்த்தல் உடைத்து.

இவ்வாற்றான் மாணாக்கனுக்குப் பருப்பொருட்டாகச் சிறப்புப் பாயிரவகையை ஆசிரியன் உரைக்குமாறு பெறப்பட்டது.

அக்குடம், தன்கண் உள்ள கழலையாக்கிய கொடி இன்னதென்று உணர்த்தாமல் பெய்தல் காரணம்பற்றி அதனை ஆக்கியோன் தன்பால் பெய்த சிறுவனென்று ஏனைச் சிறார்க்கு உணர்த்துதலும் அக்கழலிக் காரணத்தான் இன்ன இடத்து இன்னாரால் பறிக்கப்பட்டது எனக் காரணம் காட்டாமையும் உடைத்து.

அப்பனை, தான் கொடுக்கும் கள்ளினுக்கு எல்லை வெளிப்படக் காட்டாமல் கோய்வாயில் காட்டலின் ஆசிரியன் அல்லாதான் சொல்லும் பொருட்கு எல்லையும் வெளிப்படக் காணலின்றிச் சிற்சில கீழோர் வாயில் மறைந்து காணப்படும் என்பதூஉம், எஞ்ஞான்று கொடுப்பினும் தீங்கு பயக்கும் கள்ளன்றிப் பிறிதொன்று கொடாமையானும், பெயர் கேட்ட மாத்திரையான் பிறர் தீதென்று உணரா வண்ணம் தன் இயற்பெயரை மறைத்துத் தேன் என்றும் மது என்றும் நற்பொருட்கும் ஏற்கும் பிறபெயரும் கோடலானும் அல்லாதான் உரைக்கும் நூல் பெயரும் வாதம் ஆயிரம் வைத்தியம் ஏழாயிரம் வேத காவியம் விஞ்ஞான பூரணம் என்றாற்போலும் யாதானும் ஒரு பெயர்பெறும் என்பதூஉம் உணர்த்தல் உடைத்து,

அத்தெங்கு தன் இரதத்தைக் கள்ளாகத் தொகுத்துக் காட்டாமையும், பயன்படு பாளையை விரித்துக் காட்டாமையும், பயன்படாத மட்டையினை இனம்பற்றி ஓரிடத்துத் தொகுத்தும் வீடு வேய்தற்குச் சட்டமாகப் பயன்படலின் பராரையைப் பல்பகுப்பாக விரித்தும் காட்டாமையும், தன்னைப் பறித்து வேறிடத்து உய்த்தவழிக் கூந்தல் தாழை என்னும் தன் பொருண்மை சுட்டாமையும் உடைமையின், யாப்பின்வகை உணர்த்தாமையொடு காய்த்தல் இன்மையின் நுதலிய பொருள் உணர்த்தாமையும் உடைத்து.