பக்கம் எண் :

114பாயிர விருத்தி

அப்பருத்தி, பஞ்சாகிய வெளிற்றுப் பொருளைப் பிறரறியாமல் மறைத்தலின் கேட்போரையும், அப்பொருளுடைய தனக்குக் கேடன்றிக் கிடைப்பது ஒன்று இன்மையானும் சிறார் கல்வி இழத்தலானும் பயனையும் காட்டலின்று.

இவ்வாற்றான் அல்லாதான், சிறப்புப் பாயிரத்தின் பருப்பொருளும் அறியாமையின் அது கூறுமிடத்தும் பிறழ உரைப்பான் என்பது பெறப்பட்டது.

இனி நூல் என்ற சொற்குப் பொருள் உரைத்த பின்றை அதன்வகை உரைக்கப்படும்.

“இனி, நூல் என்ற சொற்குப் பொருள் யாதோ எனின், நூல் போறலின் நூல் என்ப; பாவை போல்வாளைப் பாவை என்றதுபோல; என்னை? நுண்ணிய பலவாய பஞ்சின் நுனிகளால் கைவல் மகடூஉத் தனது செயற்கை நலம் தோன்ற ஓர் இழைப்படுத்தலாம் உலகத்து நூல் நூற்றல் என்பது; அவ்வாறே சுகிர்ந்து பரந்து சொற்பரவைகளால் பெரும்புலவன் தனது உணர்வு மாட்சியில் பிண்டம் படலம் ஓத்து சூத்திரம் என்னும் யாப்புநடைபடக் கோத்து நூற்கப்படலின் என்பது. இனி ஒரு சாரார் நூல் போலச் செப்பம் செய்தலின் நூல் என்ப. இனித் தந்திரம் என்னும் வடமொழிப் பொருளை நூல் என வழங்குதல் தமிழ் வழக்கெனக் கொள்க. இது நூல் என்ற சொற்குப் பொருள்’’ எனக் களவியல் உரையில் கூறுமாற்றான் அறியப்படும். நூல் என்னும் முதனிலைத் தொழிற்பெயர் நூற்கப்படுவதாகிய செயப்படு பொருளை உணர்த்தலின் அது தொழிலாகு பெயர். நூல்போலச் செப்பம் செய்தல் என்னும் பொருளில் உவமத்தின் பெயர் பொருளுக்கு ஆயிற்று எனக் கொள்க.

இனி அந்நூல் இருவகைய; முதல் நூலும் வழிநூலுமென, அவற்றுள் முதல் நூலும் இருவகைய; இயற்கை முதல்நூலும் செயற்கை முதல்நூலும் என.

அவற்றுள் இயற்கை முதல் நூலாவது,

1“வினையி னீங்கி விளங்கிய வறிவின்
 முனைவன் கண்டது முதனூ லாகும்.’’

எனவும்,

“வரம்பி லறிவன் பயந்த தாகும்.’’

1. தொல்,பொருள் 650

2. களவியல் 11 வது பக்கம்