1“தந்திரஞ் சூத்திரம் விருத்திமூன் றற்கு முந்துநூ லில்லது முதனூ லாகும்.’’ |
எனவும் கூறினார் ஆகலின் இயற்கை முதல்நூல் தந்திரம் முதலாய வகை காணப்படாப் பிண்டம் ஆதலின் செயற்கைநலம் தோன்றாமையானும், செயற்கை முதல்நூல் எல்லாம் பிறிதொரு செயற்கை நூலின் வழிய ஆகாமல் முனைவனை வழிபட்டுத் தலைவராயினாரால் செயற்கை நலம் தோன்றச் செய்யப்பட்டமையானும் அவை இயற்கை நூலின் வழிய ஆயினும் தந்திரம் சூத்திரம் விருத்தி என்னும் வேறுபாட்டால் முதன்மைய ஆகலின் முதல்நூல் எனப்பட்டன. இனித் தானே தலைவனாகிய முனைவனால் செயற்கை நலம் தோன்றச் செய்யப்பட்ட நூலும் உள. அவை ஆலவாய்ப் பெருமானடிகள் செய்த களவியல் போல்வன. களவியல் அகத்தியமும் தொல்காப்பியமும் முதலாய நூல் பல தோன்றிய பிற்காலத்துச் செய்யப்படினும் இயற்கை நூலின் வழித்தாகவாயினும் செயற்கை நூலின் வழித்தாகவாயினும் செய்யாமையின் முனைவன் கண்ட முதல்நூல் எனவே சான்றோரால் கொள்ளப்பட்டது. இனி முத்தமிழ் அகத்திய முதல் நூலாசிரியனை அமர முனிவன் என்றது என்னை எனின், 2“துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத் திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று.’’ |
என்றார் ஆகலின், அவன் 3பொருள்சேர் புகழ்த்துணை கூறல் புத்தேள் நாட்டுப் புலவர்க்கும் அரிதாகலின் நூலான் அறிந்தவற்றுள் சில கூறுதும். ஆசிரியன் அகத்தியற்குக் குடத்தில் உற்பவமாய காரணத்தால் கும்பமுனி கும்பசம்பவன் முதலாய பெயர் வழங்கின. பிற காரணங்களால் குறுமுனி தமிழ்முனி முதலாய பிறபெயரும் வழங்கும். அவனே தேவ இருடிகளுள் சிறந்தான் எனப் புராணம் கூறும். அவன் புகழ் கூறாத புராணமும் இல்லை; இதிகாசமும் இல்லை; தேவரும் இல்லை; முனிவரும் இல்லை. நிலவுலகத்து அரசன் ஒருவன் இந்திரபதம் பெறின் அதனைத் தேவர்கள் அறிதற்பொருட்டு அகத்தியன் முதலாய இருடிகள் எழுவர் ஒரு நாள் அவன் சிவிகை சுமத்தல் வழக்கு. ஆதி ஊழியில் ஒருகாலத்துப் புரூரவச் சக்கிரவர்த்தி பேரனும்
1களவியல் 11-வது பக்கம் 2திருக்குறள் 22. 3திருக்குறள் 5. |