பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்119

இனி ஆரியமொழியுள் முதல்கவி என்று பலரானும் புகழப் பட்ட இருடியாகிய வான்மீகி தான் இயற்றிய இதிகாசமாகிய இராமாயணத்துள் “அகத்திய இதி விக்யாதோ லோகே சுவேநைவ கர்மணா’’ எனத் தொடங்கிக் குடிலமாகிய அகத்தைப் போக்கின காரணத்தால் அகத்தியன் என்னும் பெயரிய முனிவரனை இராமன் அவன் ஆச்சிரமத்தில் சென்று தரிசித்து அருள் பெற்றுப் போயினன் எனக் கூறுதலானும், பரசுராமன் அரசர் குலத்தை அழித்துவந்தனன் என்றும் இராமற்குத் தோற்றபின்னர் அவன் சினம் ஒழிந்து தவத்தில் புக்கான் என்றும் கூறுதலானும், கடைச்சங்கத்து நல்லிசைப் புலவருள் ஒருவராகிய கூலவாணிகன் சாத்தனார் மணிமேகலைக்கண்,

1“செங்கதிர்ச் செல்வன் றிருக்குலம் விளக்குங்
 கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட
 வமர முனிவ னகத்தியன் றனாது
 கரகங் கவிழ்ந்த காவிரிப் பாவை’’

எனவும்,

2“ஓங்குயர் மலயத் தருந்தவ னுரைப்பத்
 தூங்கெயி லெறிந்த தொடித்தோட் செம்பியன்’’

எனவும்,

3“மன்மருங் கறுத்த மழுவா ணெடியோன்
 றன்முன் றோன்ற றகாதொழி நீயெனக்
 கன்னி யேவலிற் காந்த மன்னவ
 னிந்நகர் காப்போர் யாரென நினைஇ
 நாவலந் தண்பொழி னண்ணார் நடுக்குறக்
 காவற் கணிகை தனக்காங் காதல
 னிகழ்ந்தோர் காயினு மெஞ்சுத லில்லோன்
 ககந்த னாமெனக் காதலிற் கூஉ
 யரசா ளுரிமை நின்பா லின்மையிற்
 பரசு ராமனின் பால்வந் தணுகா
 னமர முனிவ னகத்தியன் றனாது
 துயர்நீங்கு கிளவியின் யான்றோன் றளவுங்
 ககந்தன் காத்தல்’’

எனவும் கூறுதலானும், பரசுராமன் தவவலியால் கார்த்தவீரியன் முதலாகப் பல தலைமுறை அரசர் குலத்தை வேரறுத்து வந்தான் என்பதூஉம் இராமன் காலத்தில் அவனுக்குத் தோற்றுப் பின்னர்ப்


1. பதிகம் 9- 12வது அடி

2. விழாவறை காதை 3,4 வது அடி

3.சிறைசெய்காதை 25- 37 வது அடி