பக்கம் எண் :

120பாயிர விருத்தி

போர் ஒழிந்தான் என்பதூஉம், காவிரிப்பூம்பட்டினத்தரசன் காந்தன் என்பானொடு பரசுராமன். போர் குறித்துவரச் சயமகளாகிய கன்னி அவ்வரசன் முன்பு தோன்றி, ‘நீ மழுவோனொடு போர் செய்யாமல் மறைதி’ என்று ஏவினள் என்பதூஉம் அவன் அச்சொற்படி தன் நகரைக் காக்குமாறு ககந்தனை வைத்துப் பின்னர் அகத்தியன்பால் அவன் அருள்பெற்று உய்யுமாறு சென்றனன் என்பதூஉம், அவ்வரசன் பொருட்டே அகத்தியன் கரகங் கவிழ்த்துக் காவிரியை அளித்தான் என்பதூஉம் பிறவும் பெறப்படலின், இராமன் இலங்கை சென்ற காலத்திற்கு முன்னும் பரசுராமனை அஞ்சி ஒளித்தமையால் இராமனுக்கு முற்காலத்தான் என்று கருதப்படும் காந்தன் காலத்திற்கு முன்னும் காவிரிநதி உற்பத்திக்கு முன்னும் எனக் கருதப்படும் பண்டைக் காலத்தே, ஆசிரியன் தென்திசை மலயத்துப் போந்தமையும் தமிழ் முதல்நூல் அளித்தமையும் பெறப்படும்.

இன்னும் வான்மீகி பொருநை நதியைக் கண்டபின் அதற்குத் தென்பாலுள்ள பாண்டியனது பொன்மயமாகிய கபாடமும் காண்பீர் என வானர வீரர்க்குச் சுக்கிரீவன் உரைத்ததாகக் கூறலின், நலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதிற்று ஆண்டு தலைச்சங்கம் இரீஇய தென்மதுரையைக் கடல் கொண்டபின்னர்ப் பொற்கதவம் உடைமையால் கபாடபுரம் என்னும் பெயரிய இடைச்சங்கம் இரீஇய நகரம் தோன்றிய காலத்தில்தான் இராமன் அகத்தியனைத் தரிசித்தான் என்பதூஉம் பெறப்படும்.

இனிச் செயற்கை முதல்நூலோடு ஒத்த மரபிற்றாய் ஆசிரிய மத விகற்பம்படக் கிடப்பது வழிநூல் எனப்படும்; என்னை?

1“முன்னோர் நூலின் முடிபொருங் கொத்துப்
 பின்னோன் வேண்டும் விகற்பங் கூறி
 யழியா மரபினது வழிநூ லாகும்.’’

என்றார் ஆகலின்.

அது தொல்காப்பியம் இசைநுணுக்கம் மாபுராணம் பூதபுராணம் முதலாயின போல்வது.

செயற்கை முதல்நூலுக்கு இணைநூல் உண்மையின் அதன்வழித்தாகத் தோன்றும் நூலுள் ஆசிரிய மத விகற்பமுறல்


1இறையனார் களவியல் 12-வது பக்கம்