இயல்பாயிற்று. அவ்வழிநூலும் அதன்வழித்தாக ஒருநூல் உளதாயின் அந்நூலுக்கு முதல் நூலாம். இவ்வாற்றான் ஒருவற்குத் தந்தையாயினான் பிறன் ஒருவனுக்கு மகனும் ஆயினாற்போல முனைவன் கண்ட இயற்கை முதல் நூல் ஒழிந்த ஏனைய நூலெல்லாம் முதல்நூலும் வழிநூலும் என ஈரியல்பும் உடையவாயின; என்னை, 1“மரபுநிலை திரியா மாட்சிய வாகி யுரைபடு நூறா மிருவகை யியல முதலும் வழியுமென நுதலிய நெறியின’’ |
என்றார் ஆகலின். இனி வழிநூலுள் சிலவற்றைச் சிறிது வேறுபாடு நோக்கிச் சார்புநூல் எதிர்நூல் எனவும் ஒருசாரார் வேண்டுப; என்னை. 2“இருவர் நூற்கு மொருசிறை தொடங்கித் திரிபுவே றுடையது புடைநூ லாகும்.’’ |
எனவும், 3“தன்கோ ணிறீஇப் பிறன்கோண் மறுப்ப தெதிர்நூ லென்ப வொருசா ரோரே.’’ |
எனவும் கூறினார் ஆகலின். இனிச் சார்புநூல் என்பது யாதோ எனின், செய்யுள் இலக்கணம் அகத்தியத்துள் மிகவும் பரந்து கிடத்தலானும் தொல்காப்பியத்துள் மிகவும் சுருங்கி இருத்தலானும் அவ்விருவர் நூலுள்ளும் ஒருவழி முடிந்த அதனை ஓர் உபகாரம் நோக்கி ஒரு கோவைப்படப் பல்காப்பியனார் பல்காயனார் சிறுகாக்கைபாடினியார் முதலியோர் செய்த நூல் முதலியன போல்வது. அது தனக்கு முதல்நூலை நோக்க வழநூலே ஆயினும், அவற்றுள் ஒன்றன் வழியானே முற்றும் கூறாது இரண்டன் வழியானும் ஒருபுடையே கூறலான்அதனை ஒருசார் ஆசிரியர் சார்புநூல் எனக் கூறலும் அமையும் என்பது. இனி எதிர்நூல் என்பது யாதோ எனின், முதல்நூலின் முடிந்த பொருளை ஒருவன் யாதானும் ஒரு காரணத்தால் பிறழவைத்தால் அதனை உலகம் மெய் எனக் கொண்டு, மயங்காமைப் பொருட்டுக்
1தொல், பொருளதிகாரம், 649. 2,3களவியல், 12- வது பக்கம் |