கருவியால் திரிவு காட்டியவன் கோள் மறுத்து முதல்நூல் பொருளையே தன் கோளாக நிறுத்தி ஒள்ளியான் ஒரு புலவன் நூல் செய்யுமாயின் அந்நூல் அப்பெயர் பெறும் என்பது. அதுவும் முதல் நூலை நோக்க, வழி நூலாயினும் பிறன்கோள் மறுக்கும் வேறுபாடு உடைமையான் எதிர்நூல் எனக் கூறலும் அமையும் என்பது. அவ் இரு நூலும் இவ்வேறுபாடு உடையவாயினும் முதல் நூலின் முடிந்த பொருளை முரணாது கூறும் அழியா மரபின ஆகலின் அவற்றை ஆசிரியர் தொல்காப்பியனார் வழிநூலுள் அடக்கினார். அல்லதூஉம், 1“அவற்று, ணூலெனப் படுவது நுவலுங் காலை நுதலிய பொருளை முதலிற் கூறி முதனடு விறுதி மாறுகோ ளின்றித் தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி யுண்ணின் றமைந்த வுரையொடு பொருந்தி நுண்ணிதின் விளக்க வதுவதன் பண்பே.’’ |
எனவும், 2“ஒத்த சூத்திர முரைப்பிற் காண்டிகை மெய்ப்படக் கிளந்த வகைய தாகி யீரைங் குற்றமு மின்றி நேரிதின் முப்பத் திருவகை யுத்தியொடு புணரி னூலென மொழிப நுணங்குமொழிப் புலவர்.’’ |
எனவும், 3“நூலெனப் படுவது நுதலிய பொருளை யாதிக் கண்ணே யறியச் சுட்டி யோத்துமுறை நிறுத்துச் சூத்திர நிரைஇ முதல்வழி சார்பென மூவகை மரபிற் றொகைவகை விரியின் வசையறத் தெரிந்து ஞாபகஞ் செம்பொரு ளாயிரு வகையிற் பாவமைந் தொழுகும் பண்பிற் றாகிப் புணர்ச்சியி னமைந்து பொருளகத் தடக்கித் தனக்குவரம் பாகித் தான்முடி வதுவே.’’ |
எனவும்,
1தொல்,பொருள், 479 ‘நூலெனப்படுவது நுதலிய பொருளைமுதலு முடிவுமாறு கோளின்றி யென்பது பேராசிரியர் கொண்ட பாடம். 2. தொல், பொருள் 654 3. களவியல் 12 வது பக்கம் |