எனப் பாயிரம் செய்தற்கு உடம்பட்டமையானும், கடைச்சங்கத்தாருள் களவியல் பொருள் கண்ட கணக்காயனார் மகனார் நக்கீரனார் “இடைச்சங்கத்தார்க்கும் கடைச்சங்கத்தார்க்கும் நூலாயிற்றுத் தொல்காப்பியம்’’ எனக் கூறினமையானும் என்பது. இனி நச்சினார்க்கினியர், “பாண்டியன் மாகீர்த்தி இருபத்து நாலாயிரம் ஆண்டு வீற்றிருந்தான் ஆகலின் அவனும் அவன் அவையில் உள்ளோரும் அறிவு மிக்கு இருத்தலின், அவர்கள் கேட்டிருப்ப அதங்கோட்டாசிரியர் கூறிய கடாவிற்கு விடை கூறினார். அகத்தியனார் அதங்கோட்டாசிரியரை நோக்கி, ‘நீர் தொல்காப்பியன் செய்த நூலைக் கேளற்க’ என்று கூறுதலானும், தொல்காப்பியனாரும் பல்காலும் சென்று ‘யான் செய்த நூலை நீர் கேட்டல் வேண்டும்’ என்று கூறுதலானும், ‘இவ்விருவரும் வெகுளாமல் இந்நூற்குக் குற்றம் கூறி விடுவல்’ எனக் கருதி அவர் கூறிய கடாவிற்கு எல்லாம் விடை கூறுதலின், ‘அரிதப’ என்றார். அவர் கேளன்மின் என்றற்குக் காரணம் என்னை எனில், ‘தேவர் எல்லாரும் கூடி யாம் சேர இருத்தலின் மேருத் தாழ்ந்து தென்திசை உயர்ந்தது; இதற்கு அகத்தியனாரே ஆண்டு இருத்தற்கு உரியர்’ என்று அவரை வேண்டிக் கொள்ள அவரும் தென்திசைக்கண் போதுகின்றவர்; கங்கையாருழைச் சென்று காவிரியாரை வாங்கிக்கொண்டு, பின்னர் யமதக்கினியாருழைச் சென்று அவர் மகனார் திரணதூமாக்கினியாரை வாங்கிக்கொண்டு புலத்தியனாருழைச் சென்று அவருடன் பிறந்த குமரியார் உலோபா முத்திரையாரை அவர் கொடுப்ப நீரேற்று இரீஇப் பெயர்ந்து, துவாரவதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண்கோடி வேளிர் உள்ளிட்டாரையும் அருவாளரையும் கொண்டுபோந்து, காடு கெடுத்து நாடாக்கிப் பொதியிலின்கண் இருந்து, இராவணனைக் கந்தருவத்தால் பிணித்து, இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கி, திரணதூமாக்கினியாராகிய தொல்காப்பியனாரை நோக்கி, ‘நீர் சென்று குமரியாரைக் கொண்டு வருக’ எனக் கூற, அவரும் ‘எம்பெருமாட்டியை எங்ஙனம் கொண்டுவருவல்’ என்றார்க்கு, ‘முன்னாகப் பின்னாக நாற்கோல் நீளம் அகலம் நின்று கொண்டு வருக’ என்றார்க்கு, அவரும் அங்ஙனம் கொண்டுவருவழி வையை நீர் கடுகிக் குமரியாரை ஈர்த்துக்கொண்டு போயவழித் தொல்காப்பியனார் கட்டளை இறந்து சென்று, ஓர் வெதிர்ங்கோலை முறித்து நீட்ட, அது |