பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்129

அதுதான் நான்கு வகைத்து; சூத்திரத்தானும் ஓத்தினானும் படலத்தானும் பிண்டத்தானும் இயலுதல் பற்றி. என்னை?

1“அதுவே தானு மீரிரு வகைத்தே
 யொருபொரு ணுதலிய சூத்திரத் தானு
 மினமொழி கிளந்த வோத்தி னானும்
 பொதுமொழி கிளந்த படலத் தானு
 மூன்றுறுப் படக்கிய பிண்டத் தானுமென்
 றாங்கனை மரபி னியலு மென்ப.’’

என்றார் ஆகலின், இனிச் சூத்திரமாவது யாதோ எனின்,

2“அவற்றுட், சூத்திரந் தானே,
 யாடி நிழலி னறியத் தோன்றி
 நாடுத லின்றிப் பொருணனி விளங்க
 யாப்பினுட் டோன்ற யாத்தமைப் பதுவே.’’

எனவும்,

3“மேற்கிளந் தெடுத்த யாப்பினுட் பொருளொடு
 சில்வகை யெழுத்தின் செய்யுட் டாகிச்
 சொல்லுங் காலை யுரையகத் தடக்கி
 நுண்மையொடு புணர்ந்த வொண்மைத் தாகித்
 துளக்க லாகாத் துணைமை யெய்தி
 யளக்க லாகா வரும்பொருட் டாகிப்
 பல்வகை யானும் பயன்றெரி புடையது
 சூத்திரத் தியல்பென யாத்தனர் புலவர்.’’

எனவும்,

4“நுட்ப மொட்பந் திட்பஞ் சொல்லிற்
 சுருக்கங் கருத்துப் பகுதியொடு தொகைஇ
 வருத்தமில் பொருட்பய னிகழ்ச்சி சூத்திரம்.’’

எனவும்,

5“பொதுவினுஞ் சிறப்பினும் போற்றுங் காலைப்
 பெறுதல் பெற்றவை காத்தல் காப்பொடு
 பிறிதுபெற நிகழ்த்த லதற்கருத் தாகும்.’’

எனவும்,


1தொல், பொருள்- 480 வது சூத்திரம். இதனை இரண்டு சூத்திரமாக்கினார் பேராசிரியர்.

2தொல், பொருள் 482

3தொல், பொருள் 656

4,5தொல், பாயிரம், இளம்பூரணருரை மேற்கோள்