பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்131

இனி நூல் செய்தற்கு உரியான் யாவன், நூல் செய்யும் ஆறு யாதோ எனின்,

1“அப்புல மரிறப வறிந்து முதனூற்
  பக்கம் போற்றும் பயந்தெரிந் துலகத்
  திட்ப முடைய தெளிவர வுடையோ
  னப்புலம் படைத்தற் கமையு மென்ப.’’

எனவும்,

2“சூத்திர முரையென் றாயிரு திறத்தினும்
  பாற்படத் தோற்றல் படைத்த லென்ப
  நுற்பய னுணர்ந்த நுண்ணி யோரே.’’

எனவும் கூறுமாற்றானும் பிறவாற்றானும் அறிக.

அவற்றுள் மலை, எல்லா இடத்தும் வளமுடைமையின், ஓர் உறுப்பு, உடைத்து. நிலன், வளம் தரும் இடனும் வரம்பும் என இரண்டு உறுப்பு உடைத்து. பூ, தேன் உடைத்தாகிய காம்பும் இதழும் மகரந்தமும் என மூன்று உறுப்பு உடைத்து. துலாக்கோல் நிறுக்கும் பொருளைத் தாங்கும் தூக்கும், அதனைத் தாங்கிய தூங்கு கயிறும், அதனைத் தாங்கிய கோலும், அதனைத் தாங்கிய பிடி கயிறும் என நான்கு உறுப்பு உடைத்து.

இவ்வாற்றான் ஆசிரியன் நூலது நான்கு உறுப்பும் உரைப்பான் என்பது பெறப்படலின், நூலின் ஒரு பகுதியாய் சில சூத்திரம் கற்றும் சில ஓத்தே கற்றும் படலத்துச் சில கற்றும் குன்ற உரைப்பான் அல்லன்; முற்றக் கற்றோன் ஆதலின் குன்றாது உரைப்பன் என்று உணரப்படும்.

அக்குடம் கழலும் குடமும் என இரு வகைத்து ஆகலின் மலைக்கு மறுதலைத் தன்மைத்து. அப்பனை, பாளையும் ஓலையும் மரனும் என மூவகைத்தாகவும் அதன்மேலாகவும் பகுக்கப்படலின் நிலத்தின் மறுதலைத் தன்மைத்து, அத்தெங்கு, மட்டையும் ஓலையும் ஈர்க்கும் மரனும் என நான்கு வகைத்தாகவும் அதன்மேலாகவும் பகுக்கப்படுதலின் பூவின் மறுதலைத் தன்மைத்து. அப்பருத்தி, முத்தோலும் உட் பொருளும் காம்பும் என ஐவகைத்தாகவும் அதன் மேலாகவும் பகுக்கப்படுதலின் துலாக்கோலின் மறுதலைத் தன்மைத்து.


1, 2தொல், பாயிரம், இளம்பூரணர் உரை மேற்கோள்.